4 ராசிக்காரர்களுக்கு விநாசத்தை ஏற்படுத்தும் சூரியன் ராகு சேர்க்கை! விநாச தோஷம் யாருக்கு?
சூரியன் ஏப்ரல் 14ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைகிறார். ஏற்கனவே அங்கு இருக்கும் ராகு கிரகம், தமிழ் புத்தாண்டு தினமான அன்று முதல் சூரியனின் சேர்க்கையால் சில ராசிகளுக்கு வக்ர பலன்களைக் கொடுப்பார்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் கலவையான பலன்கள் காணப்படும். தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில், எந்த சர்ச்சையிலும் சிக்காமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் வரலாம்.
நீண்ட நாட்களாக வேலை தேடும் தனுசு ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்திலும் காத்திருக்க வேண்டியிருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை அதிகரிக்கும், ராகுவின் தாக்கம், உங்கள் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், எனவே கவனமாக இருக்கவும்
சூரியன் மற்றும் ராகு சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இவர்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமண வாழ்க்கையிலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள், இல்லையெனில் உறவு முறிந்துவிடும்
ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் பணியிடத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரத்தில் ஒரு போட்டியாளர் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வரலாம். முதலீட்டைத் தவிர்க்கவும்.