Aishwarya Rajesh Weight Loss Tips : தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர், தன் உடல் எடையை சமநிலையை வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Aishwarya Rajesh Weight Loss Tips : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அனைத்து நடிகைகளையும் போல உடல் எடையை பாலன்ஸாக வைத்துக்கொள்கிறார். இதற்காக அவர் சில ஸ்பெஷலான டயட்டையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்றி வருகிறார். அதில், அவர் வேகவைத்து சாப்பிடும் சில உணவுகளும் கூட அடக்கம். அவை என்னென்ன தெரியுமா?
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் உட்பட நடிகைகள் அனைவருமே தங்களின் உடல் எடையை சரியாக சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதற்காக அவர் என்னென்ன செய்துள்ளார் தெரியுமா?
ஐஸ்வர்யா ராஜேஷ், தனது காலையை யோகாவுடன் தொடங்குவாராம். இது, அவரது உடல் மெல்லியதாக வைத்திருக்க உதவுமாம். உணவு செரிமானத்திற்கும் இது உதவுகிறது.
உடலை ஆரோக்கியமாகவும் ஆக்டிவாகவும் வைத்திருக்க, ஐஸ்வர்யா தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்கிறார். ரன்னிங், ஜாக்கிங் உள்ளிட்டவை இவரது தினசரி பயிற்சிகளுள் ஒன்று எனக்கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா, தனது உடற்பயிற்சிகளில் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறாரோ அதே போல உணவு கட்டுப்பாட்டிலும் கண்டிப்புடன் இருப்பாராம். இவரது உடல் எடை ஏறாமல் பார்த்துக்கொள்ளும் டயட் உணவுகள் என்னென்ன தெரியுமா?
ஐஸ்வர்யா, வேகவைத்த காய்கறிகளைத்தான் உட்கொள்கிறாராம். பிரவுன் அரிசி சாப்பிடும் இவர், அதனுடன் சேர்த்து பச்சை இலை காய்கள், கீரைகள், க்ரில் செய்த மீன் உள்ளிட்டவற்றை தனது டயட்டில் சேர்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா தனது 3 வேலை உணவுகளை பிரித்து பிரித்து எடுத்துக்கொள்கிறாராம். சரியான டயட்டில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பின்பற்ற வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ், உடல் எடையை பாலன்ஸ் ஆக வைத்துக்கொள்ள அவருக்கு உதவும் இன்னொரு விஷயம், உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வாராம். அதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.