Tamil Actress Who Are Are Not Married Yet : சில நடிகைகள், 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Tamil Actress Who Are Are Not Married Yet : சில தென்னிந்திய நடிகைகள், திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். இதில் சிலர் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கின்றனர். இன்னும் சிலர், பெரிதாக சினிமாவில் ஆக்டிவாக இல்லை. அந்த நடிகைகள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
1/7நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனாவிற்கு தற்போது 55 வயது ஆகிறது. தமிழில் தளபதி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த இவர், மலையாள நடிகையாவார். இவர், திருமணத்தில் நாட்டம் இல்லாததால் திருமணம் செய்துகொள்ளவில்லை.
2/7பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர் சித்தாரா. இவரும், 51 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
3/7தமிழ் சீரியல்களில் நடித்திருப்பவர் ஸ்ருதிராஜ். இவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
4/720 ஆண்டுகளுக்கு முன்னர் ஹீரோயினாக பல படங்களில் நடித்து வந்தவர் கௌசல்யா. இவருக்கு இப்போது 45 வயது ஆகிறது. சமீபத்திய படங்களில் வயதான கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இவர், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
5/7நடிகை த்ரிஷாவிற்கு, நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றது. அதன் பிறகு, அவர் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்போது அவருக்கு 42 வயது ஆகிறது.
6/7தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவருக்கு 43 வயதாகிறது. இவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
7/7முன்னாள் நடிகையான நக்மா, பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு, அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவருக்கு 50 வயது ஆகிறது.