பணக்கார தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள்.. யார் யார் தெரியுமா?

Tamil Actresses Married Wealthy Businessmen: பணக்கார தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /7

Tamil Actresses Married Wealthy Businessmen: சினிமா நடிகைகள் பலர் நடிகர்களையே திருமணம் செய்துக்கொண்ட நிலையில், சிலர் தொழிலில் சிறந்து இருப்பவர்களை திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். அப்படி தொழிலதிபர்களை கரம்பிடித்த தமிழ் நடிகளைகள் யார் யார்? 

2 /7

கீர்த்தி சுரேஷ்: தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னனி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கொச்சியைச் சேர்ந்த தொழிலதிபரும் கட்டுமான அதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு மணந்தார். 

3 /7

ஹன்சிகா மோத்வானி: விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் 2022 ஆம் ஆண்டில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை மணந்தார், அவரும் ஹன்சிக்காவின் பால்ய நண்பரும் ஆவார். 

4 /7

காஜல் அகர்வால்: தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், 2020 ஆம் ஆண்டு தொழில்முனைவோர் கௌதம் கிட்ச்லுவை மணந்தார். கிட்ச்லு ஒரு உள்துறை வடிவமைப்பு மற்றும் மின் வணிக முயற்சியின் நிறுவனர் ஆவார்.

5 /7

நிவேதா பெத்துராஜ்: நடிகை நிவேதா பெத்துராஜ், சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது கார் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானை தனது காதலன் என அறிமுகம் செய்தார். விரைவில் நிவேதா பெத்துராஜ் அவரை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /7

அசின்: முன்னாள் நடிகை மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை 2016 இல் மணந்தார். மேலும் தனது குடும்பத்தில் கவனம் செலுத்துவதற்காக திரையுலகத்தை விட்டு வெளியேறினார்.

7 /7

ஸ்ரேயா சரண்: 2018 ஆம் ஆண்டில், நடிகை ஸ்ரேயா ரஷ்ய தொழில்முனைவோர் மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோஷீவை மணந்தார்.