ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 10 திரைப்படங்கள்! இந்த வாரம் தியேட்டர்ல ட்ரீட்தான்!

Tamil Films Releasing On August 1st 2025 : ஆகஸ்ட் 1ஆம் தேதி 10 திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

Tamil Films Releasing On August 1st 2025 : மாதத்தின் தொடக்கத்தில் எப்போதும், புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, 10 திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த படங்களில் புகழ், தர்ஷன் உள்ளிட்டோர் ஹீரோவாக நடித்திருக்கும் படங்கள் ஆகும். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

1 /10

ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படம், பிளாக் மெயில். இந்த படம் மு.மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படம், ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.

2 /10

கனா பட நடிகர் தர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது.

3 /10

வெற்றி நடித்திருக்கும் முதல் பக்கம் திரைப்படம், இந்த வாரம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. இதில் ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

4 /10

அக்யூஸ்ட் திரைப்படத்தில் அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது. இதனை பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கிறார்.

5 /10

ஸ்வாசிகா முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் படம், போகி. இந்த படத்தையும் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் பார்க்கலாம்.

6 /10

சரண்டர் திரைப்படம், பிக்பாஸ் தர்ஷன் நடித்திருக்கும் படம். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 1 அன்று பார்க்கலாம். இந்த படத்தில் பாடல்களே இல்லையாம்.

7 /10

தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படம், மீண்டும் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ரிலீஸாக இருக்கிறது. இதனை மீண்டும் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

8 /10

டீஜே அருணாச்சலம், ஜனனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், உசுரே. இந்த படத்தை, ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் பார்க்கலாம்.

9 /10

கதிர், காவல் அதிகாரியாக நடித்திருக்கும் படம், மீஷா. இந்த படத்தை ஆகஸ்ட் 1 அன்று பார்க்கலாம்.

10 /10

நகைச்சுவை கலைஞர் புகழ் நடித்திருக்கும் படம், மிஸ்டர் ஜூ கிப்பர். தள்ளிப்போய் கொண்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ், வரும் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகிறது.