செம பிளாப்பான படங்கள்.. ரெம்ப எதிர்பார்ப்பு இருந்துச்சு.. இத்தனை விஜய் படங்களா?

Written ByR Balaji
Published: Nov 05, 2025, 09:11 AM IST|Updated: Nov 05, 2025, 09:11 AM IST

Tamil Flopped Movies: தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி படுதோல்விகளை சந்தித்துள்ளது. அப்படி பெரிய எதிர்பார்ப்புடன் இறங்கி பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 

1/8

2/8

பாபா: இந்த லிஸ்ட்டில் முதல் படமாக ரஜினிகாந்த்தின் பாபா படம் உள்ளது. பொதுவாக ரஜினி படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில், 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படுதோல்வியை சந்தித்தது. 

3/8

ஆளவந்தான், இந்தியன் 2 மற்றும் தக் லைஃப்: இந்த லிஸ்ட்டில் மூன்று கமல்ஹாசன் படங்கள் இடம்பெற்றுள்ளன. 2001ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான், கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 மற்றும் இந்த ஆண்டில் வெளியான தக் லைஃப் ஆகும். இப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படுதோல்வியை சந்தித்தது. 

4/8

விவேகம் மற்றும் அசல்: இந்த லிஸ்ட்டில் இரண்டு அஜித் குமார் படங்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டு வெளியான அசல் மற்றும் 2017ஆம் ஆண்டு வெளியான விவேகம் படம் ஆகும். இப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தன. ஆனால் தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக அசல் திரைப்படம் படுதோல்வியை அடைந்தது. 

5/8

சுறா, புலி மற்றும் பீஸ்ட்: மூன்று விஜய் படங்கள் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. 2010ஆம் ஆண்டு வெளியான சுறா, 2015ல் வெளியான புலி மற்றும் 2022ல் வெளியான பீஸ்ட் படம் ஆகும். இப்படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், மிகப்பெரிய பிளாப் ஆனது. 

6/8

மாற்றான் மற்றும் அஞ்சான்: நடிகர் சூரியாவின் மாற்றான் மற்றும் அஞ்சான் படங்கள் எதிர்பார்ப்புடன் வெளியாகி பிளாப் ஆனது. இப்படங்கள் முறையே 2012 மற்றும் 2015ஆம் ஆண்டில் வெளியானது. 

7/8

காஷ்மோரா: நடிகர் கார்த்தி கார்த்தி காஷ்மோரா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாலும் படத்தில் நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்ததாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படுதோல்வியை சந்தித்தது. 

8/8

சீமராஜா: நடிகர் சிவகார்த்திகேயனின் சீமாராஜா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. சமந்தா, கீர்த்தி சுரேஷ், சிம்ரன், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது.