10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

Written ByUmabarkavi K
Published: Oct 25, 2025, 12:46 PM IST|Updated: Oct 25, 2025, 12:46 PM IST

Tamil Nadu 10,12th Board Exam: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றி முழுமையாக இங்கு பார்ப்போம். 

 

1/7

தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வு அண்மையில் முடிவடைந்தது. தற்போது அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  2025-26ஆம் கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 

 

2/7

2025ஆம் ஆண்டு மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையின்படி, தமிழகத்தில் 11ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது என சொல்லப்படுகிறது. 2017-2018ஆம் கல்வியாண்டிற்கு முன்பு இருந்த நடைமுறைப்படியே  தேர்வு நடத்தவும் உள்ளதாக தகவல் வெளியானது. 

 

3/7

இந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பொதுத் தேர்வு அட்டவணை இதுவரை வெளியாகவில்லை. தீபாவளி பண்டிகை, தொடர் மழை, சட்டப்பேரவை கூட்டத் தொடர் போன்ற காரணங்களால் தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

4/7

மாணவர்கள் இந்த மாதம் (அக்டோபர்) 10,12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், அட்டவணை வெளியாகவில்லை. இந்த நிலையில், 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 

 

5/7

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை 2025 நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்றும் நவம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டடம் நடைபெறும். இதன் பிறகு 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என கூறியுள்ளார். 

 

6/7

தேர்வு அட்டவணையில் பாட வாரியாக தேர்வு நடைபெறும் நாள், செய்முறை தேர்வு, தேர்வு முடிவுகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். எனவே, மாணவர்கள் தேர்வு அட்டவணையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை தயாரிப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2024ஆம் ஆண்டு 10,11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியானது. 

 

7/7

2024-25ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.03 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.