தமிழக அரசுக்கே ஐடியா கொடுக்கலாம்! - பட்ஜெட் குறித்து கருத்து சொல்ல இதை பண்ணுங்க

Tamil Nadu Government: வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக உங்களது கருத்துகளை தமிழ்நாடு அரசு வரவேற்பதாக அறிவித்துள்ளது.

 

மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் மற்றும் மார்ச் 15ஆம் தேதி வேளான் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

 
1 /8

தமிழ்நாடு அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையை (Tamil Nadu Budget 2025) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (TN Finance Minister Thangam Thennarasu) வரும் மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

2 /8

மேலும், முதல்முறையாக பட்ஜெட் உடன் பொருளாதார ஆய்வறிக்கையும் (Economic Survey) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 /8

பட்ஜெட்டை முன்னிட்டு பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், அமைப்புகளிடம் இருந்தும் நிதித்துறை அதிகாரிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தனர்.

4 /8

தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் (Tamil Nadu Agriculture Budget 2025) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (Agriculture Minister MRK Panneerselvam) தாக்கல் செய்வார்.

5 /8

இந்நிலையில், இந்தாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

6 /8

இதன்மூலம், வேளாண் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய திட்டம் குறித்து உங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் செயலி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் கூறலாம்.

7 /8

tnagribudget2025@gmail.com என்ற மின்னெஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம். அதுமட்டுமின்றி பிளே-ஸ்டோரில் இருந்து உழவர் செயலியை பதிவேறக்கம் செய்து அதிலும் நீங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

8 /8

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், இதுதான் திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பலருக்கும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.