வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல்... சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடக்கிறது?

Tamil Nadu Assembly 2025: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அந்த வகையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்களுக்கு நடக்கிறது என்பதை இங்கு காணலாம்.

Tamil Nadu Budget Assembly Session 2025: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு (TN Speaker Appavu) தலைமையில் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

1 /8

TN Budget 2025: 2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) இன்று (மார்ச் 14) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

2 /8

TN Agriculture Budget 2025: தொடர்ந்து, நாளைய தினம் (மார்ச் 15) வேளாண் பட்ஜெட், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்படும்.

3 /8

TN Budget Assembly Session: அதே நேரத்தில், வரும் திங்கட்கிழமை (மார்ச் 17) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 /8

பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், மார்ச் 24ஆம் தேதி முதல் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 /8

மார்ச் 24 அன்று நீர்வளத்துறை, மார்ச் 25 அன்று நகராட்சி நிர்வாகம், மார்ச் 26 அன்று ஊரக வளர்ச்சித்துறை என அடுத்தடுத்து அனைத்து துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.

6 /8

மேலும், வரும் ஏப்.30ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

7 /8

முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இதன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. இன்றைய பட்ஜெட் தாக்கலில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.

8 /8

மேலும், ஆண்டுதோறும் 100 நாள்கள் சட்டப்பேரவை கூட்டப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமார் 45 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.