தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தேர்தலை நடத்த ஆகும் செலவுகள் மற்றும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1/6தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டுக்கான சட்டமன்றப் பொதுத்தேர்தலை முழுமையாக நடத்தி முடிக்க, இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒட்டுமொத்தமாக ரூ. 1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2/6தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் அரசு பணியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு என அவர்களின் ஊதியத்திற்காக மட்டும் சுமார் ரூ. 100 கோடி செலவிடப்படுகிறது.
3/6சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கறாரான வரம்பை நிர்ணயித்தது.
4/6வாக்குச்சாவடிகள் அமைத்தல், EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் பராமரிப்பு, போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளுக்கான செலவுகள், கண்காணிப்பு குழுக்களுக்கான செலவுகள் அனைத்தும் இந்த ரூ. 1,302 கோடி நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.
5/6தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ. 795 கோடியும், 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு ரூ. 1,009 கோடியும் செலவிடப்பட்ட நிலையில், இந்த 2026 தேர்தலில்தான் செலவுத் தொகை ரூ. 1,300 கோடியை கடந்துள்ளது.
6/6இந்த ரூ. 1,302 கோடி என்பது அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் அதிகாரப்பூர்வமாக செய்யும் செலவு மட்டுமே. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவுகளையும் சேர்த்தால், ஒரு சட்டமன்றத் தேர்தலின் ஒட்டுமொத்த செலவு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.