மினி ஏலத்தில் கவனம் ஈர்க்கும் இந்த 7 தமிழக வீரர்கள்... CSK குறிவைப்பது யாரை?

Written BySudharsan G
Published: Nov 23, 2025, 04:00 PM IST|Updated: Nov 23, 2025, 04:00 PM IST

IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த 7 தமிழக வீரர்களை அணிகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

Tamil Nadu Players In IPL 2026 Mini Auction: தமிழக வீரர்கள் ஏற்கெனவே பல அணிகளில் இருக்கும் நிலையில், டிஎன்பிஎல் மூலம் கண்டறியப்பட்ட திறமைகளை ஐபிஎல் அணிகளும் வாங்க முற்படும். அந்த வகையில், ஐபிஎல் அணிகள் வரும் மினி ஏலத்தில் குறிவைக்கப்போகும் தமிழக வீரர்கள் யார் யார் என்பதை இங்கு அலசலாம்.

ஐபிஎல் மினி ஏலம் 20261/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ஐபிஎல் 2026 மினி ஏலம் (IPL 2026 Mini Auction) வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், மினி ஏலத்தில் இந்த 7 தமிழக வீரர்கள் ஐபிஎல் அணிகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது. 

ஐபிஎல் மினி ஏலம் 20262/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

அமித் சாத்விக்: 2025 டிஎன்பிஎல் தொடரில் இவர் சாம்பியன் பட்டம் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் 9 இன்னிங்ஸில் 340 குவித்து மிரட்டினார். அணியின் வெற்றிக்கு இவரது அதிரடி ஓபனிங் பெரிய பங்களிப்பை அளித்தது. தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்காக தேர்வாகி உள்ளார். சிறப்பாக விளையாடும்பட்சத்தில் ஐபிஎல் அணிகளின் கண்களில் தென்படுவார்.

ஐபிஎல் மினி ஏலம் 20263/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

விஜய் சங்கர்: சென்னை சூப்பர் கிங்ஸ் இவர் மினி ஏலத்தில் விடுவித்தது. ஆனால் இவர் ரஞ்சிக் கோப்பையில் சமீபத்தில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் திரிபுரா அணிக்காக தேர்வாகி உள்ளார். ஒருவேளை இத்தொடரில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் ஏலத்தில் நல்ல தொகைக்கு எடுக்கப்படுவார். 

ஐபிஎல் மினி ஏலம் 20264/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

துஷார் ரஹேஜா: இவர் டிஎன்பிஎல் 2025 தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடினார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2024 சீசனில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியில் 2வது இடத்தில் இருந்த இவர், 2025இல் முதலிடத்தை பிடித்தார். இவரும் தமிழ்நாடு அணியில் தேர்வாகி உள்ளார். இவரின் அதிரடி ஆட்டம் ஏற்கெனவே பல அணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

ஐபிஎல் மினி ஏலம் 20265/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

இசக்கி முத்து: இவரும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணியின் வேகப்பந்துவீச்சாளர்தான். இந்த சீசனில் 8 இன்னிங்ஸில் 14 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இவர் தொடர்ச்சியாக மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் பந்துவீசக்கூடியவர். 23 வயதான இவரை பல அணிகள் உற்று நோக்கியிருக்கிறது. சிஎஸ்கே இவரை எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் 20266/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

நாராயணன் ஜெகதீசன்: விக்கெட் கீப்பர் பேட்டரான இவருக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இவர் தொடர்ந்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இந்திய டெஸ்ட் ஸ்குவாடிலும் சேர்க்கப்பட்டார். எனவே, இந்த சீசனில் இவரை எதாவது ஒரு அணி எடுக்க வாய்ப்புள்ளது. 

ஐபிஎல் மினி ஏலம் 20267/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

விமல் குமார்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மிடில் ஆர்டரின் தூணாக பார்க்கப்படும் இவர் 9 இன்னிங்ஸில் 251 ரன்களை குவித்துள்ளார். எனவே இவருக்கும் நல்ல வாய்ப்புள்ளது. இவருக்கு வயது 22.

ஐபிஎல் மினி ஏலம் 20268/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ஹன்னி சைனி: 20 வயது வீரரான இவர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பினிஷராக இருக்கிறார். அனுபவம் குறைவு என்றாலும் இவரது பேட் ஸ்விங் பெரியளவில் கவனம் ஈர்க்கும் இருப்பதாகவும், பல ஐபிஎல் அணிகள் இவரை Trails-க்கு அழைத்ததாகவும் அஸ்வின் சமீபத்தில் கூறியிருந்தார். எனவே இவரையும் பேக்அப்பாக எடுக்க வாய்ப்புள்ளது.