தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. முன்னதாக 2019ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அறிவித்த நிலையில், 2021ஆம் தேதி ஜூலை 18ஆம் தேதியாக மாற்றப்பட்டது. மேலும், இந்த பெயருக்கு பின்னர் பலரின் தியாகங்கள் உள்ளன. அது குறித்தும் தமிழ்நாடு நாளை கொண்டாடும் தேதியை ஏன் மாற்றினார்கள் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
1/7சுகந்திரத்திற்கு முன்னாள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை மூன்று மாகாணங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். அந்த வகையில் தென்னகத்தில் உள்ள தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பேசும் மக்களை கொண்டு மெட்ராஸ் மாகாணம் அமைக்கப்பட்டது.
2/71947ஆம் ஆண்டு சுகந்திரம் கிடைத்த பின்னர் சில ஆண்டுகள் மெட்ராஸ் மாகாணமாகவே இருந்தது. 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படி தமிழ் பேசும் மக்களை கொண்டு உருவாக்கப்பட்ட மாநிலம் மெட்ராஸ் மாநிலம் என அழைக்கப்பட்டது.
3/7மெட்ராஸ் மாநிலம் என்ற பெயருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் கவனம் பெற்ற நிலையில், பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார். ஆனால் சங்கரலிங்கனார், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக இருந்தார்.
4/779 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த சங்கரலிங்கனார் உடல் நிலை மோசமாகி அக்டோபர் 13, 1956 அன்று அவர் உயிர் தியாகம் செய்தார். சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
5/7சங்கரலிங்கனார் உயிர் நீத்த அடுத்த ஆண்டு, அதாவது 1957ஆம் ஆண்டு திமுக சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அவர்களது தீர்மானத்திற்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே பெற்ற நிலையில், தோல்வி அடைந்தது. பின்னர் பல முறை தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு குரல்கள் எழுப்பப்பட்டன.
6/7பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் 1967ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்று ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது கொண்டு வந்த தீர்மானத்திற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க, அப்போதைய அவைத் தலைவர் சி.பா. ஆதித்தனார், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்படுகிறது என அறிவித்தார்.
7/7மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மெட்ராஸ் ஸ்டேட் உருவான நாள்தான் நவம்பர் 1ஆம் தேதி. அந்த நாளை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணாதுரை தீர்மானம் கொண்டு வந்த ஜூலை 18 அன்றுதான் தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டும் என அறிவித்தார்.