தீபாவளி இலவச வேட்டி சேலை விதிமுறை: மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்

Tamil Nadu Free Saree Dhoti Scheme: மூத்த குடிமக்களுக்கு தீபாவளியையொட்டி இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Free Saree Dhoti Scheme: மூத்த குடிமக்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தது.

1 /7

Tamil Nadu Free Saree Dhoti Scheme: மூத்த குடிமக்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தது.  

2 /7

இதற்காக சில நிபந்தனைகளையும் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வயது முதிர்வால் இருப்பதால், அவர்களின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு தோல்வியுற்றாலும் அங்கீகாரச் சான்று மூலம் இலவச வேட்டி சேலை வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

3 /7

இது மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், நியாய விலைக் கடை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக (ePOS) பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.  

4 /7

மேலும், விரல் ரேகை, கருவிழி ரேகை இரு வழியாகவும் சரிபார்ப்பு தோல்வுயுறும் பட்சத்திலும் அங்கீகார சான்று மூலம் தற்சமயம் பொது விநியோக திட்ட பண்டங்கள் வழங்கப்படும் இடங்களிலும் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என கூறியுள்ளது.  

5 /7

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவது தொடர்பான சமூக பாதுகாப்பு திட்ட ஆணையரகத்திலிருந்து பெறப்படும் வழிகாட்டு கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதனை நெறிமுறைகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது  

6 /7

எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் இலவச வேட்டி சேலைகள் விநியோகிக்க வேண்டும் என்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

7 /7

அரசின் இந்த அறிவிப்பு தீபாவளி நாளில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களும் புத்தாடை அணிந்து மகிழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.