ரூ.36 லட்சம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு... இந்த மாணவர்களுக்கு மட்டும் - யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Written BySudharsan G
Published: Sep 19, 2025, 12:53 PM IST|Updated: Sep 19, 2025, 12:53 PM IST

Tamil Nadu Government: வெளிநாடு சென்று பயிலும் கல்வி பயிலும் 10 மாணவர்களுக்கு சுமார் 36 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசு உதவித்தொகையாக வழங்குகிறது. இது யார் யாருக்கு வழங்கப்ப்படும், விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கு காணலாம்.

தமிழ்நாடு அரசு கல்வி ரீதியில் பலவகையான உதவித்தொகைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில், வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை உதவும்.  

தமிழ்நாடு அரசு1/8

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) பலதரப்பட்ட மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் வகையிலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

 

தமிழ்நாடு அரசு2/8

தமிழ்நாடு அரசு

அந்த வகையல், சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

 

தமிழ்நாடு அரசு3/8

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு 2025-2026ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையை வழங்குகிறது.  

 

தமிழ்நாடு அரசு4/8

தமிழ்நாடு அரசு

ஒரு மாணவருக்கு ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இந்த கல்வித்தொகை மொத்தம் 10 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க சில தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

தமிழ்நாடு அரசு5/8

தமிழ்நாடு அரசு

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும் என்பது முதன்மையான தகுதியாகும்.  

 

தமிழ்நாடு அரசு6/8

தமிழ்நாடு அரசு

மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.    

தமிழ்நாடு அரசு7/8

தமிழ்நாடு அரசு

பொறியியல், மேலாண்மை, பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

 

தமிழ்நாடு அரசு8/8

தமிழ்நாடு அரசு

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் அக்டோபர் 31ஆம் தேதியாகும்.