Tamil Nadu Government : நன்னிலம் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே
1/9Nannilam Magalir Nila Udaimai Thittam : தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் நன்னிலம் திட்டமும் ஒன்று. விவசாய கூலிகளாகவே இருக்கும் பெண்களின் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் மாபெரும் புரட்சி திட்டமும் கூட இது.
2/9இதற்காகவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்துக்கு நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என பெயர் சூட்டியுள்ளது. ஏழை, எளிய பெண்களின், அதுவும் விவசாய கூலிகளாகவே இருக்கும் பெண்களை சொந்த நிலத்தின் உரிமையாளராக மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்.
3/9அப்பேர்பட்ட பெருமை வாய்ந்த திட்டத்தில் தான் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளது. இனி இந்த திட்டத்துக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வழியாகவே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
4/9இது தொடர்பாக தாட்கோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாட்கோ நிறுவனத்தின் திட்டங்களான CM-ARISE, PM- AJAY, நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் ஆகியவற்றுக்கு தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் அனைவரும் அருகிலுள்ள இ-சேவை மைய் வழியாகவே இனி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/9நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தைப் பொறுத்தவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மற்ற சமூக பெண்கள் விண்ணப்பிக்க முடியாது.
6/9இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் ஆண்டு குடும்ப வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 2.5 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம். அதிகபட்சமாக தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுக்கும்.
7/918 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 20 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது.
8/9இத்திட்டத்தில் கீழ் நிலம் வாங்கும் பெண்களுக்கு நிலத்தை பதிவு செய்ய முத்திரைத் தாள் பதிவு கட்டணங்கள் கிடையாது. முழுமையாக விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்புகள் விரைவாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆழ்துளை கிணறு,பம்புசெட் அமைக்கவும் அரசு மானியம் கொடுக்கிறது.
9/9இதுதவிர இன்னும் பல சலுகைகளும் இத்திட்டத்துக்கு உண்டு. தகுதியான பெண்களாக இருப்பினும் அருகில் உள்ள இசேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதில் இருக்கும் சிரமங்களை களையும் பொருட்டு தாட்கோ நிறுவனம் இப்போது இ-சேவை மையம் வழியாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்திருக்கிறது.