Tamil Nadu Government: தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமரப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டித்து அறிவிக்கப்பட்டது.
Naan Mudhalvan Scheme: நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வு பிரிவில் உள்ள யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
1/8தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் நான் முதல்வன் திட்டம் (Naan Mudhalvan Scheme) செயல்படுத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வுப் பிரிவு கடந்த 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் (Tamil Nadu Government) தொடங்கப்பட்டது.
2/8இந்நிலையில், தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான (UPSC Mains) ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமரப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டித்து தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
3/82025ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் (மே 25) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
4/8அதாவது, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
5/8மாணவர்கள் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் அறிவிக்கை (Notification) https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration/ என்ற இணையதளத்தில் கடந்த 21.06.2025, அன்று வெளியிடப்பட்டுள்ளது.
6/8இந்த அறிவிக்கையின் படி, ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 2ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டது.
7/8அந்த வகையில், பெரும்பாலான ஆர்வலர்கள் இருப்பிடச் சான்று/ பிறப்பிடச் சான்று (Nativity Certificate) கோரி விண்ணப்பித்துள்ளதால், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்துள்ளன.
8/8இதைக் கருத்தில் கொண்டு, திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 2ஆம் தேதியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.