Tamil Nadu Government: நலிவடைந்த பெண்கள் சுய தொழில் தொடங்க திறன் பயிற்சியும், மானியமும் தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு குறித்து இங்கு விரிவாக காணலாம்.
தமிழ்நாடு அரசு பெண்கள் நலம் சார்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimmai Thittam), புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 கோடி 14 லட்சம் குடும்ப தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் (Pudhumai Penn Thittam) உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதேபோல், ஆதரவற்ற பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் செயல்படுகிறது.
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இந்த நலவாரியத்தின் நோக்கமாகும்.
18 வயதுக்கு மேல் உள்ள கைம்பெண்கள், ஆதரவற்ற/நலிவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோர் இந்த வாரியத்தில் உறுப்பினராகலாம்.
இந்த வாரியத்தின் கீழ் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு இரண்டு வகையான உதவிகள் தமிழ்நாடு அரசு செய்கிறது. இதுகுறித்து இங்கு காணலாம்.
மேலும், திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம தொழில் சம்பந்தமான திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலம் வாரியத்தின் உறுப்பினரான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கி வழிவகை செய்யப்படும்.
சுய தொழில் செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது இந்த வாரியத்தின் உறுப்பினர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கிக் கடனில் உறுப்பினரின் பங்குத் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.