Child Labour : வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கடை உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Child Labour Warning and Awareness : குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கடை உரிமையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குழந்தை தொழிலாளர்களை எந்தவொரு தொழிலும் ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டம் நாடு முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்த சட்டம் கடுமையான பின்பற்றப்படுகிறது.
இந்த சூழலில் தென்காசி மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் அறிவிப்பில், தென்காசி மாவட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது.
பணியமர்த்தும் நேர்வில் பணிக்கு அமர்த்தி வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலம் 2025 மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) PAN INDIA குழந்தை தொழிலாளர்கள் ஒழித்தல் மற்றும் விழிப்புணர்வு என்ற கருப்பொருளில் தென்காசி மாவட்டத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக தென்காசி நகரப் பகுதிகள், சங்கரன்கோவில் நகரப் பகுதிகள், ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள், கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகள், திருவேங்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல்மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1988-ன் கீழ் குழந்தைத் தொழிலாளர் மாவட்ட தடுப்புப் படை மூலம் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி கூட்டாய்வில், தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் அபாயகரமற்ற தொழில் இனங்களில் 18 வயதிற்குட்பட்ட மூன்று வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். மேலும், தென்காசி நகரப்பகுதியில் அபாயகரமற்ற தொழில் இனங்களில் 14 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டனர்.
மேற்கண்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தியவர் மீது மேற்கண்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1985-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது.
பணியமர்த்தும் நேர்வில் பணிக்கு அமர்த்தி வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.