தமிழக அரசு புதிய உத்தரவு.. இலவச வேட்டி-சேலை வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்

Tamil Nadu Government Latest News: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகள் குறித்து தமிழக அரசு புதிய உத்தரவை போட்டுள்ளது.

Free Dhoti And Saree Latest News: தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி, சேலையை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அர அறிவிப்பு.

1 /6

பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 /6

கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

3 /6

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.

4 /6

பொங்கல் திருநாளை முன்னிட்டு  1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை சேர்த்து வழங்கப்பட்டது.

5 /6

1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் பணி நடைபெற்றது.

6 /6

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் மூலம் ரூ.249.76 கோடி செலவில் 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.