ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா? இன்றே விண்ணப்பிக்கவும் - சுகி, சொமேட்டோ ஊழியர்களுக்கு குட் நியூஸ்

Published: Sep 15, 2025, 09:33 AM IST|Updated: Sep 15, 2025, 09:33 AM IST

Scooter subsidy : ஸ்கூட்டர் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

 

Scooter subsidy : ஸ்கூட்டர் வாங்க யார் யார் விண்ணப்பிக்கலாம்? இ-ஸ்கூட்டர் வாங்க தமிழ்நாடு அரசு கொடுக்கும் மானியம் எவ்வளவு என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

1/8

Scooter subsidy : தமிழ்நாடு அரசு டெலிவரி மேன் வேலை பார்ப்பவர்களுக்கு உதவும் விதமான ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வரை மானியம் கொடுக்கிறது. பார்சல்கள் டெலிவரி, உணவு டெலிவரி போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணபிக்கலாம். 

 

2/8

அதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்க மானியம் பெற விரும்பினால் முதலில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். 

 

3/8

அவ்வாறு பதிவு செய்தவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இப்போது இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

4/8

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு ரூ.20,000/- மானிய விலையில் இ- ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

5/8

யார் யார் விண்ணப்பிக்கலாம்? -  தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணையம் சார்ந்த பதிவு பெற்ற கிக் தொழிலாளர்கள் சுவிகி, சுமாட்டோ, அமேசான், பிளிப்கார்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் www.tnuwwb.tn.gov.in இணையதளத்தில் இ-ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 

6/8

மேலும் பதிவு பெறாத கிக் தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்ய மேற்கண்ட இணையதளம் மூலமாக பதிவு செய்த பின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

7/8

மேற்படி விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 6வது மாடி, ஈ-பிரிவில் அமைந்துள்ள திருப்பத்தூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

8/8

மற்ற மாவட்டத்தினர் உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நாடி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற கூடுதல் தகவலை கேட்டு உடனடியாக விண்ணப்பிக்கவும்.