Tamil Nadu Government | ரேஷன் பொருட்கள் எடை சரியாக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி முக்கிய உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
Tamil Nadu Government | ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் கொடுக்கிற வகையில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை மற்றும் பண்டகமில்லா அட்டை உள்ளிட்ட மொத்தம் நான்கு வகையான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன.
அந்த ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் எல்லா குடும்ப அட்டைதாரர்களும் மாதந்தோறும் தவறாமல் ரேஷன் கடைகளுக்கு சென்று அவர்களுக்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலம் அவர்களுக்கான பொருட்களை வாங்கவில்லை என்றால் ரேஷன் அட்டை வகை மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல அரசில் நலத்திட்டங்களும் கிடைக்கும். அதனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருமணமானவர்களுக்கு குடும்ப அட்டை மிக முக்கியம்.
இதுவரை ரேஷன் கார்டு வாங்கவில்லை என்றால் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் குடும்ப அட்டை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு முக்கியமான உத்தரவை அமைச்சர் சக்கரபாணி பிறப்பித்துள்ளார்.
அண்மையில் நடந்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கனிவான முறையில் சேவை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அனைத்து பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரேநேரத்தில் வழங்கிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்களின் எடை சரியாக இருப்பதை ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்டை மாநில அதிகாரிகளுடன் இதுகுறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடத்துமாறும் அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.