பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு... தமிழ்நாடு அரசின் சூப்பர் சுற்றுலா - எவ்வளவு தெரியுமா?

Written BySudharsan G
Published: Jul 28, 2025, 01:46 PM IST|Updated: Jul 28, 2025, 01:46 PM IST

Ponniyin Selvan Tour: பொன்னியன் செல்வன் வாசகர்கள், ஆர்வலர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு அதன் சுற்றுலாத் துறையின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு சுற்றுலாக்களை வளர்க்க புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. பொன்னியின் செல்வன் நாவல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதால் தற்போது அது சார்ந்த சுற்றுலா திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுலா1/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

சோழப் பேரரசை அடிப்படையாக கொண்டு வரலாற்று புனைவாக எழுதப்பட்ட 'பொன்னியன் செல்வன்' படைப்பு (Ponniyin Selvan) தமிழக மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நாவலாகும். எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி 1950 முதல் 1965 வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக எழுதிய இந்த புதினம் பின்னர் 5 பாகங்களாக வெளியிடப்பட்டது.

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா2/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களிடம் வரவேற்பு பெற்று வந்த இந்த நாவல், இயக்குநர் மணிரத்னத்தால் திரைப்படமாக உருபெற்றது. இதை தொடர்ந்து, இந்த படைப்பும் இன்னும் அதிகமானோரை சென்றைடந்தது. 

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா3/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

வரலாற்று புனைவு என்றாலும் கூட இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்கள் இன்னும் காவேரியை கரையைச் சுற்றி அமைந்திருக்கின்றன. அந்த வகையில், பொன்னியின் செல்வன் வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். 

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா4/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் சுவடுகளை தேடி - வந்தியத்தேவன் பாதையில் ஒரு நாள்' என்ற சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா5/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

தஞ்சாவூர் நகரில் துவங்கும் இந்த சுற்றுலா, வீரநாராயணன் ஏரி, உடையார்குடி, கடம்பூர், திருப்புறம்பியம், நாதன்கோவில், பழையாறை, உடையாளூர், தஞ்சாவூர் பெரியகோவில் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா6/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த சுற்றுப்பயணம் இரவு 8 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா7/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

ஏசி வாகனத்தில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நிபுணர்கள் வழிகாட்டும் வகையில் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலா8/8

தமிழ்நாடு அரசின் சுற்றுலா

இந்த சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9489129765 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.2000 ஆகும்.