விரைவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Latest News: நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Dearness Allowance Hike Soon: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

1 /8

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். அதுக்குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.

2 /8

கவர்மென்ட் எம்ப்ளாயிஸ்க்கு தமிழ்நாடு அரசு ஒரு சர்ப்ரைஸ் அனௌன்ஸ்மென்ட் வெளியிட போறதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ் மற்றும் கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சேலரி ஐக் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான முடிவு எடுத்திருப்பதாகத் தகவல். 

3 /8

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் தமிழக அரசு வெளியிட உள்ளது.

4 /8

முன்னதாக மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

5 /8

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு குட் நியூஸ் கொடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது.

6 /8

அகவிலைப்படி உயர்வு என்பது, தற்போதைய பணவீக்கும் மற்றும் விலைவாசி உயர்வு பேஸ் பண்ணி, அகவிலைப்படி தொகை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது.

7 /8

மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதத்தில் இருந்து 55 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என எதிர்பார்பில் உள்ளனர்.

8 /8

அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டால், இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.