கிராமப்புற பெண்களை தொழிலபதிராக்கும் தமிழ்நாடுஅரசின் சூப்பர் திட்டம் - 30% மானியம் கேரண்டி

Thu, 05 Dec 2024-12:02 pm,

தமிழ்நாடு கிராமப்புற பெண்களை தொழிலபதிபராக்கும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் (valnthu kattuvom thittam) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலோனோர் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களில்  உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் அல்லது அவர்களின் குடும்பத்தார் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் 18  வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பயனாளிகள் எஸ்சி எஸ்டி, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 5 விழுக்காடு மட்டும் முதலீடு செய்தால் போதும், இதர பிரிவினர் 10 விழுக்காடு மட்டும் மொத்த முதலீட்டு தொகை திட்டத்தில் முதலீடு செய்தால் போதும். எஞ்சிய தொகையை அரசே கடன் ஏற்பாடு செய்து கொடுக்கும். அதில் 30 விழுக்காடு மானியம்  கிடைக்கும். 

அதாவது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பயனாளிகளாக சேர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், மற்றவர்கள் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தில் எப்படி சேருவது என கேட்டீர்கள் என்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உங்களுக்கு யார் என்பது தெரியாவிட்டால் TNRTP என்ற  வெப்சைட்டுக்கு சென்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த பக்கத்துக்கு சென்ற உடனே புரொபைல் பக்கத்தில் இருக்கும் Login என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் Citizen என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

அதனை உள்ளிட்டவுடன் உங்களுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபிஐ TNRTP பக்கத்தில் உள்ளிட வேண்டும். இந்த பக்கத்தில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அல்லது செய்யும் தொழிலின் தகவல் உள்ளிட்ட கேட்கப்படும் தகவல்களை உள்ளிட வேண்டும். இதை செய்த உடனே உங்களுடைய விண்ணப்பத்தை இசிபி அதிகாரிகள் பார்ப்பார்கள். 

அதன்பிறகு உங்களை தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களை கேட்பார்கள். அப்போது உங்களுக்கு திட்டங்கள் குறித்து அனைத்து தகவல்களையும் விளக்குவார்கள். பின்பு மகளிர் வாழ்வாதார சேவை மையத்துக்கு உங்களின் தொழில் திட்ட முன்னுரிமையை அனுப்பி வைப்பார்கள். 

அங்கு ஆடிட்டர் வைத்து செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் செய்து கொடுப்பார்கள். அதாவது உங்கள் தொழிலுக்கு தேவையான லைசென்ஸ்கள், வங்கிகளில் கொடுக்க வேண்டிய திட்ட முன்வடிவு ஆகியவற்றையும் செய்து கொடுப்பார்கள். 

அதுமட்டும் இல்லாமல் திட்ட முன் வடிவை வங்கிகளிடம் கொடுத்து உங்களுக்கு லோன் பெற்றுக் கொடுக்கும் வரையிலான அனைத்து வேலைகளையும் மகளிர் வாழ்வாதார சேவை மையம் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை வாழ்ந்து காட்டுவோம் ஆன்லைன் பக்கத்தில் உங்களுக்கு இருக்கும் தொழில் ஆர்வத்தையும், விளக்கத்தையும் தெரிவித்தால் போதும். மற்றவை எல்லாம் அதிகாரிகளே தானாக தொடர்பு கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டுவார்கள். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link