Fact Check : தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மத்திய அரசு வழங்குகிறதா?

Tamil Nadu Government Fact Check : தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மத்திய அரசு வழங்குவதாக பரப்பப்படும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tamil Nadu Government : தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மத்திய அரசு வழங்குகிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

1 /9

தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு அரசு மற்றும் அரசு திட்டங்களுக்கு எதிராக பரப்பப்படும் பொய்கள், அவதூறுகளுக்கு சரியான ஆதாரங்களுடன் உண்மையான விளக்கத்தை கொடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மத்திய அரசு வழங்குகிறது என பரப்பப்பட்ட தகவலுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.  

2 /9

தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத நிதி உதவி, ஒன்றிய அரசின் நிதியில் வழங்கப்படுகிறது என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக உலக வங்கியிடமிருந்து 1,500 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வாங்கி செலவழித்துள்ளது என்றும் யூட்யூபர் மாரிதாஸ் முழு பொய்யைத் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும்.

3 /9

தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் மாத உதவித் தொகையை ஒன்றிய அரசு வழங்குகிறது என சொல்லப்பட்டதை பொய் என தெரிவித்திருக்கும் உண்மை கண்டறியும் குழு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ2,000/- வீதம் 2.50 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. 

4 /9

இந்த நிதி முழுவதும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2024-2025 ஆம் நிதியாண்டில் ரூ.543 கோடி செலவிடப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

5 /9

பொய் -2 : மாற்றுத் திறனாளிகள் பெயரில் உலக வங்கியிடமிருந்து 1,500 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வாங்கி, மாற்றுத் திறனாளிகளைக்  கணக்கெடுப்பதாக சொல்லி மொத்த பணத்தையும் செலவழித்துள்ளது.

6 /9

உண்மை : இது முற்றிலும் பொய். இதுவரையில் உலக வங்கியிடமிருந்து இத்திட்டத்திற்காக ரூ.17.93 கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS) ரூ.1773.87 கோடி மதிப்பீட்டில் 70:30 பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

7 /9

இதன்படி, உலக வங்கியின் நிதிப் பங்களிப்பு ரூ.1,238.65 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.535.22 கோடி ஆகும். இத்திட்டம் கடந்த டிசம்பர் 2022 -ல் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான செலவீனத்தை தமிழ்நாடு அரசு முன்னதாக மேற்கொண்டு பின்னர் உலக வங்கியிடமிருந்து அதன் பங்களிப்பை(Reimbursement முறையில்) பெற்று வருகிறது. 

8 /9

இத்திட்டத்தின் கீழ், பிப்ரவரி 2025 வரை ரூ.47.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலக வங்கியிடமிருந்து அதன் பங்களிப்பாக ரூ.17.93 கோடி பெறப்பட்டுள்ளது. மேலும், ரூ.8.24 கோடி உலக வங்கியிடம் கோரப்பட்டு நிலுவையில் உள்ளது.

9 /9

உலக வங்கியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை (TN RIGHTS) பயனாளிகளுக்கு நேரடியாக உதவித் தொகை வழங்கும் திட்டம் போல மாரிதாஸ் தவறாக குறிப்பிடுகிறார். இது முற்றிலும் தவறானது. இது தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான திட்டமாகும் என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.