ரேஷன் கார்டு திருத்தம்! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கிய கட்டுபாடு!

Ration Card : ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் செய்வதில் புதிய கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.

 

Ration Card : ரேஷன் கார்டில் திருத்தங்கள் மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. முழு விவரம்

 

1 /10

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டில் (Ration Card) திருத்தம் மேற்கொள்வதில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே பொதுமக்கள் ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ள முடியும்  

2 /10

குறிப்பாக, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும். அதேபோல், ரேஷன் அட்டை பதிவிறக்கம், டூபிளிகேட் ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் ஆகியவையும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும்.  

3 /10

இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்திருப்பதால், பொதுமக்கள் இனி அடிக்கடி ரேஷன் கார்டில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்க முடியாது.  

4 /10

ஏனென்றால் ரேஷன் கார்டு தொடர்பாக அரசுக்கு செல்லும் கோரிக்கைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறைதீர்ப்பு முகாம்களிலும் இதுதொடர்பான மனுக்களே அதிகம் கொடுக்கப்படுகின்றன.  

5 /10

இதுதவிர ஆன்லைனிலும் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் கோரி பலர் விண்ணப்பிக்கின்றனர். இதுதவிர, ரேஷன் அட்டை பதிவிறக்கம், டூபிளிகேட் ரேஷன் கார்டு விண்ணப்பித்தலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது.  

6 /10

இவற்றுக்கு எல்லாம் அரசு இப்போது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது. அரசு அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், அடிக்கடி இதுபோன்ற விண்ணப்பங்களை செய்ய முடியும் என்ற நிலைக்கு கட்டுப்பாடு கொண்டு வரும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.   

7 /10

மேலும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு அடிப்படையாக இருப்பதால், அந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக அடிக்கடி சிலர் மாற்றங்களை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையிலும் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  

8 /10

ரேஷன் கார்டு சேவைகளை பெறுவதில் இப்போது கட்டுப்பாடு வந்துவிட்டதால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். முதல்முறை விண்ணப்பிக்கும்போதே தேவையான திருத்தங்களை செய்ய விண்ணப்பித்து விடுவது நல்லது.  

9 /10

இல்லையென்றால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை காத்திருந்தால் மட்டுமே அடுத்தமுறை விண்ணப்பிக்க முடியும். அப்படி விண்ணப்பித்தாலும் ஒப்புதல் பெறுவதற்கு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்ளப்படும்.   

10 /10

எனவே, பொதுமக்கள் அரசின் சேவைகளை பெற ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், அரசின் விதிமுறை மற்றும் கால அளவை கருத்தில் கொள்வது நல்லது.