அமைச்சர் அன்பில் மகேஷ் நடித்த தமிழ் சீரியல்! எது தெரியுமா?

Minister Anbil Mahesh Sun TV Serial : தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பணியில் இருப்பவர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர், ஒரு பிரபலமான சீரியலில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

Minister Anbil Mahesh Sun TV Serial : அரசியலில் களம் காணும் பலர், தங்களது வாழ்க்கையை ஏதேனும் ஒரு திரைப்பயணம் மூலம் தொடங்கியிருப்பர். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி முதல், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என பலர் திரையுலகில் இருந்துதான் தங்களது பயணத்தை தொடங்கியிருக்கின்றனர். அது போலத்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். அது என்ன சீரியல் தெரியுமா?

1 /7

தமிழ் நாட்டில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு அமைச்சராக இருப்பவர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் பேசும் விஷயங்களை அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள் கூட கேட்பர்.

2 /7

பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் சிறு வயது நண்பரும் கூட. 

3 /7

அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகளும், மக்களை கவரும் வகையில் உள்ளன. இந்த நிலையில், அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, தான் சீரியலில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசினார். 

4 /7

அன்பில் மகேஷ் நடித்த சீரியலின் பெயர், அகல்யா. 2004ஆம் ஆண்டு வெளியான இந்த சீரியலில் மஞ்சரி, சக்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

5 /7

இந்த சீரியலில், அன்பில் மகேஷ் வந்தது ஒரு காட்சிதானாம். சேரில் அமர்ந்தவாறு சுற்றிக்கொண்டே ஹெலோ சொல்வதுதான் அந்த காட்சி. 

6 /7

இந்த சீரியலில் நடித்தது குறித்து நேர்காணலில் பேசிய அன்பில் மகேஷ், இதில் தான் வந்த ஒரு காட்சியை அந்த தொடரின் பாடலில் இணைத்து விட்டதாக கூறினார். 

7 /7

தயாநிதி மாறன், “அவன் நடிச்சதே ஒரு சீன் தான், அவன் உன் நண்பன் எனதால் அதை தினமும் போடுவியா?” என்று உதயநிதி ஸ்டாலினை கலாய்த்ததாகவும் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.