தமிழகத்தின் மிகப் பெரிய பணக்கார அரசியல் தலைவர் யார்? அதிர்ச்சியூட்டும் சொத்து விவரங்கள்.

Written ByR BalajiUpdated byR Balaji
Published: Apr 12, 2026, 08:44 PM IST|Updated: Apr 13, 2026, 02:56 PM IST

அரசியல் கட்சி தலைவர்களில் அதிக சொத்து மதிப்பு வைத்திருப்பவர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். 

 

1/7

மு.க. ஸ்டாலின் (MK Stalin): திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின். இவரின் சொத்து மதிப்பு ரூ. 7 கோடி என கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அவரது தொகுதியான கெளத்தூரில் போட்டியிடுகிறார். 

 

2/7

எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami): அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி. இவரின் சொத்து மதிப்பு ரூ. 6 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இவர் 2026 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். 

 

3/7

சீமான் (Seeman): நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவரின் சொத்து மதிப்பு ரூ. 39 கோடி என கூறப்படுகிறது. இவர் 2026 தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். 

 

4/7

அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss): பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். இவரின் சொத்து மதிப்பு ரூ. 35 கோடி என கூறப்படுகிறது. இவர் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்து வருகிறார். 

 

5/7

பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth): தேமுதிக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இவரின் சொத்து மதிப்பு ரூ. 94 கோடி என கூறப்படுகிறது. 

 

6/7

டிடிவி தினகரன் (TTV Dhinakaran): அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன். இவரின் சொத்து மதிப்பு ரூ. 110 கோடி என கூறப்படுகிறது. இவர் 2026 தேர்தலை எதிர்கொள்ள  என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது கட்சி நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். இவர் எந்த தொகுதியிலும் நிற்கவில்லை. 

 

7/7

விஜய் (Vijay): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவரின் சொத்து மதிப்பு ரூ. 400 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இவர் 2026 தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் என இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார்.