நீல நிற ரேஷன் கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Published: Sep 01, 2025, 07:49 PM IST|Updated: Sep 01, 2025, 07:49 PM IST

Ration Card : தமிழ்நாட்டில் நீல நிற ரேஷன் கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்

Ration Card : தமிழ்நாட்டில் யார் யாருக்கெல்லாம் என்னென்ன கலரில் ரேஷன் கார்டு கொடுக்கப்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

1/9

Ration Card : தமிழ்நாட்டில் 2 கோடி பேருக்கும் அதிகமானோர் ரேஷன் கார்டு வைத்திருகின்றனர். அந்த்யோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள், முன்னுரிமைய அடைகள் அரிசி, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு சர்க்கரை, பொருளில்லா அட்டை என பல வகைகளில் இருக்கின்றன.

2/9

இந்த அட்டைகளை தெரிந்து வைத்திருக்கும் பலருக்கும் ரேஷன் கார்டு பல வண்ணங்களில் கொடுக்கப்படுகிறது என்பதை பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டீர்கள்

3/9

ஆம், தமிழ்நாட்டில் பச்சை, வெள்ளை, காக்கி, நீலம் என பல வண்ணங்களிலும் ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வண்ணங்கள் கொண்ட ரேஷன் கார்டுகளுக்கு பின்னாலும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் இருக்கிறது.

4/9

அதனால், யார் யாருக்கு என்னென்ன கலரில் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல்துறை ரேஷன் கார்டுகளை கொடுக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

5/9

பச்சை நிற அட்டைகள் : அனைத்து அத்தியாவசிய பொருள்கள் .குடும்ப அட்டைகள். அரிசி மற்றும் இதர இன்றியமையாப் பொருட்கள் பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பச்சை நிற குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.

6/9

வெள்ளை நிற குடும்ப அட்டைகள் : சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள். அரிசிக்கு பதிலாக சர்க்கரை பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு அரிசி தவிர இதர அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசிக்கு பதிலாக 3 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது.

7/9

வெள்ளை நிறம் :'எந்த பொருளும் பெற விருப்பமில்லை' என்ற குடும்ப அட்டைகள். பொது விநியோக திட்டத்தின் கீழ் எந்தபொருளும் தேவையில்லை என விருப்பம் தெரிவித்தவர்களுக்கு 'எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டை'கள் வழங்கப்படுகின்றன.

8/9

காக்கி நிறம்: காவலர் அட்டைகள், காவல் ஆய்வாளர் பதவிக்கு இணையான அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் அவர்கள் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு காவலர் அட்டைகள்  வழங்கப்படுகின்றன.

9/9

நீல நிறம் : வனக்காவலர் அட்டைகள். வன காவல் ஆய்வாளர் பதவிக்கு இணையான அனைத்து வன காவல் அதிகாரிகள் மற்றும் அவர்கள் கீழ் பணியாற்றும் வன் காவலர்களுக்கு காவலர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.