Tamil Nadu Tourism Womens Day Special Tour: வரும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ் நாடு அரசு
Tamil Nadu Tourism Womens Day Special Tour: வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி, உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் மகளிருக்கான ஸ்பெஷல் சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு சார்பிலும், மகளிருக்கான சில முக்கிய முன்னெடுப்புகள் இந்த தினத்தையொட்டி எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு ஏற்பாடு செய்யும் மகளிர் தின டூர் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும், இதற்கு எப்படி புக் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.
உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வரும் மார்ச் 8ஆம் தேதி, மகளிருக்கான ஸ்பெஷல் டூரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எந்தெந்த இடங்கள் இதில் சுற்றி காண்பிக்கப்படும், உணவு விவரங்கள், மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த டூர், சாலை வழியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 8ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த டூர், ஒரு நாளில் முடிவடையும்.
இந்த ட்ரிப்பில், சென்னை, மகாபலிபுரம், முதலியார்குப்பம் உள்ளிட்ட மூன்று இடங்களை சுற்றி காண்பிக்க உள்ளனர்.
இதற்கிடையே, பெண்களுக்கான சில விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
மகளிருக்காக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், மாலை வேளையில் தேநீரும் வழங்கப்படும்.
பஸ் சார்ஜ், பயண செலவு என எல்லாம் சேர்த்து மொத்தம் இதற்கு பெண்கள் வழங்க வேண்டிய தொகை ரூ.3,150. www.ttdconline.com என்ற தளத்தில் இந்த டூருக்கு புக் செய்யலாம்.