தமிழ் புத்தாண்டு: சுக்கிரன் உருவாக்கும் ராஜயோகம்.. 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும்

Written ByR BalajiUpdated byR Balaji
Published: Apr 11, 2026, 05:26 PM IST|Updated: Apr 11, 2026, 05:26 PM IST

Tamil New Year Palangal: தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் உருவாக்கும் ராஜயோகத்தால், 3 ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைய இருக்கின்றனர். 

 

1/6

தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. இந்த நாளில் சுக்கிரன் ஒரு ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறது. சுக்கிர தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இவர் தமிழ் புத்தாண்டு அன்று வருணனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். 

 

2/6

வருணன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த சூழலில் தான் சுக்கிரன் மற்றும் வருணன் 45 டிகிரி கோணத்தில் அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கின்றனர். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், மேஷம், ரிஷபம் மற்றும் கும்பம் ஆகிய 3 ராசிகளில் அதிக தாக்கம் இருக்கும். 

 

3/6

மேஷம் (Aries): அர்த்த கேந்திர யோகத்தால், மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற இருக்கின்றனர். நீண்ட காலமாக முடிவடையாமல் இருக்கும் வேலைகள் இந்த காலகட்டத்தில் நிறைவடையும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

 

4/6

ரிஷபம் (Taurus): அர்த்த கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி ரீதியாக வளர்ச்சி அடைய இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் குறையும். பண சேகரிப்பு அதிகரிக்கும். தொழிலில் லாபம் இருக்கும். வேலை இடத்தில் சம்பள உயர்வு இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியும். 

 

5/6

கும்பம் (Aquarius): சுக்கிரன் மற்றும் வருணன் உருவாக்கும் அர்த்த கேந்திர யோகம் கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். குறிப்பாக தொழிலில் பெரிய வெற்றியை பெற முடியும். சிக்கி இருக்கும் பணம் கைக்கு வரும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.  

 

6/6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.