Tamilnadu Government Top Five Schemes: தமிழ்நாடு அரசின் டாப் திட்டங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்
Tamilnadu Government Top Schemes : தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட டாப் திட்டங்கள் என்ன? அவற்றால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
1/11தமிழ்நாடு அரசு சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, முன்னோடி திட்டங்கள் எல்லாம் இப்போது செயல்பாட்டில் உள்ளன. அவற்றால் மக்கள் நாள்தோறும் நேரடியாக பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாடு அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் டாப் திட்டங்களை (Tamilnadu Government Top Schemes) இங்கே பார்க்கலாம்.
2/11விடியல் பயணம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி செயல்படுத்தபட்ட திட்டம் பெண்களுக்கான விடியல் பயணம். இந்த திட்டத்தின் கீழ் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கின்றனர். திருநங்கைகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு அவர்களும் இலவசமாக பயணிக்கின்றனர்.
3/11கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று இது. இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டம். ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அரசிடமிருந்து நேரடியாக பெற்று வருகின்றனர். விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
4/11புதுமைப் பெண் திட்டம் : பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பெண்கள் கல்வி வழியே வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைவதற்கும் பலமான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கும் திட்டமாக உள்ளது இந்த திட்டம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த பெண்கள் கல்லூரி படிப்பில் சேர்ந்தால் மாந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறலாம். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.
5/11தமிழ் புதல்வன் திட்டம் : பெண்கள், மாணவிகளைத் தொடர்ந்து கல்லூரி படிக்கும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டம் இது. புதுமைப் பெண் திட்டத்தில் உள்ள விதிமுறையைப் போல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேர்ந்தால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறலாம். இந்த திட்டத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
6/11நான் முதல்வன் திட்டம் : மேலே உள்ள திட்டங்களைப் போல் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்து நன்றாக படிக்கும் மாணவ, மாணவிகளின் மத்திய, மாநில அரசுப் பணிகளின் கனவை நினைவேற்றும் திட்டமாக உள்ளது. மத்திய அரசு பணிகளுக்குரிய தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு, எஸ்ஸ்சி தேர்வு, ரயில்வே தேர்வுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளுடன் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி.
7/11படித்து வேலை இல்லாதவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சமூகத்தில் உள்ள படித்திருக்கும் அனைத்து தரப்பினருக்கும் உகந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி, தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு முகாம்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் அரசு செயல்படுத்தி வருகிறது.
8/11இதுதவிர பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம், பணி செல்லும் பெண்களுக்காக தோழி விடுதி என பல சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. விளையாட்டுத்துறை வீரர்களுக்கான ஊக்கத்தொகை, பணி உத்தரவாதம், ஓய்வூதியம் முன்பு இருந்ததைவிட இப்போது அதிகரித்துள்ளது.
9/11மக்களுக்கான தேவைகளை தீர்க்க இசேவை மையங்கள் வழியாக ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் பட்டா விண்ணப்பம் வரை 108க்கும் மேற்பட்ட சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் அன்றாடம் மக்களால் நேரடியாக பயன்பெறும் அரசின் முக்கிய திட்டங்களாக இருக்கின்றன.
10/11குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களும் அரசின் இந்த சேவைகள் வழியாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்பெறும் பயனாளியாக இருப்பார்கள்.
11/11அந்த அளவுக்கு இந்த திட்டங்களும், இதுதவிர இன்னபிற திட்டங்களும் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.