வீட்டுமனை பட்டா, பிறப்பு இறப்பு சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு கோரிக்கைகளுக்கு ஒரே நாளில் தீர்வு வேண்டுமா?

Tamilnadu government : பட்டா, பிறப்பு இறப்பு சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு கோரிக்கைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க பொதுமக்கள் செய்ய வேண்டியது இதுதான்

Tamilnadu government : வீட்டு மனை, பட்டா, பிறப்பு இறப்பு சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

1 /8

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு குட்நியூஸ். நீண்ட நாட்களாக வீட்டு மனை, பட்டா, பிறப்பு இறப்பு சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க வேண்டுமா?

2 /8

இப்போது உங்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே நாளில் கிடைக்கும். ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தாலுக்காவிலும் பசலி வருவாய் தீர்வாயம் நடைபெற்று வருகிறது. இதனை ஜம்பந்தி என்றும் சொல்வார்கள்

3 /8

மக்கள் யாரேனும் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா கேட்டு அலைந்து கொண்டிருந்தால், பிறப்பு இறப்பு சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இந்த முகாமில் கலந்து கொண்டால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும். 

4 /8

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தாலுகாக்காவில் பசலி வருவாய் தீர்வாயம் நடக்கும் நாளில் அங்கு உங்களின் கோரிக்கை மனு மற்றும் அதற்கான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து உங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

5 /8

அரசு தரப்பில் உங்களுக்கான கோரிக்கை எந்த பிரச்சனையும் இல்லாமல், அதாவது சட்டச்சிக்கல் ஏதும் இல்லாமல் இருந்தால் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கக்கூடியதாக இருந்தால் உங்களுக்கான தீர்வு உடனே கிடைக்கும்.

6 /8

திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மே மாதம் 22 ஆம் தேதி முதல் பசலி வருவாய் தீர்வாயம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுக்காக வாரியாக ஒவ்வொரு தேதியில் நடக்கும். 

7 /8

அப்போது, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைப் பெற்றுக் கொள்ளப்படும்.

8 /8

இதில் தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.