Team India: இந்திய அணியில் ஹர்ஷித் ராணா பெரியளவில் சோபிக்காதபட்சத்தில், அவரை போலவே இந்த 3 பௌலர்களுக்கும் அதே வாய்ப்புகளை வழங்கப்படும். அவர்கள் யார் என்பதை இங்கு காணலாம்.
Harshit Rana Replacement Players: ஹர்ஷித் ராணா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் சுமாரான வீரராகவே இருக்கிறார். அப்படியிருக்க அவருக்கு அனைத்து தொடர்களிலும் வாய்ப்பு கொடுப்பது கம்பீர் மற்றும் அகர்கர் மீது பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
1/9ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20ஐ தொடருக்கான இந்திய ஸ்குவாட் நேற்று (அக். 4) அறிவிக்கப்பட்டன. இதில் ஹர்ஷித் ராணா டி20ஐ மற்றும் ஓடிஐ என இரண்டு தொடரிலும் தேர்வாகியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
2/923 வயதே ஆன ஹர்ஷித் ராணா தனது ஆக்ரோஷமான மற்றும் வேகமான பந்துவீச்சால் கடந்த 2024 ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்றார். அந்தாண்டு அவர் விளையாடிய கேகேஆர் அணி கோப்பையை வென்றது. 2024 தொடரில் 19 விக்கெட்டுகளையும், 2025 தொடரில் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்ததும் இவரும் இந்திய அணிக்குள் வந்தார்.
3/9ஹர்ஷித் ராணா இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட், 5 ஓடிஐ போட்டிகளில் 10 விக்கெட், 3 டி20ஐ போட்டிகளில் 5 விக்கெட் என மொத்தம் 10 சர்வதேச போட்டிகளில் 19 விக்கெட்டை எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை, இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என மூன்று பார்மட்டிலும் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
4/9ஸ்குவாடில் தொடர்ச்சியாக இடம் கிடைத்தாலும் அவ்வப்போது தான் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார். அது வேறு கதை. ஆனால், ஹர்ஷித் ராணா இன்னும் சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளராக உயரவில்லை. சிராஜ் கூட டி20ஐ போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணாவுக்கு டி20ஐயில் இடமில்லை.
5/9அப்பிடியிருக்க, ஹர்ஷித் ராணாவுக்கு மட்டும் தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பது ஏன்? அவர் சர்வதேச அளவிலான வீரர் என்பதை எதன்மூலம் நிரூபித்தார்? என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை, ஒருவேளை அந்த பதில் கம்பீரிடமோ அல்லது தேர்வுக்குழுவிடோமோ இருக்கலாம்.
6/9ஆனால் அவர் தொடர்ந்து சுமாராக பந்துவீசி வரும்போது அத்தனை போட்டிகளிலும் வாய்ப்பளிப்பதே கேள்விகளை எழுப்புகிறது. இந்திய அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை வளர்த்துவிட திட்டமிட்டால், ஹர்ஷித் ராணா பெரியளவில் சோபிக்காத பட்டத்தில் அவரை போல் இந்த 3 பௌலர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
7/9வைஷாக் விஜயகுமார்: கர்நாடகாவைச் சேர்ந்த இவருக்கு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைக்கும் போதெல்லாம் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை அளித்துள்ளார். ஹர்ஷித் ராணாவை விட சற்று அனுபவமும் வாய்ந்தவர் என்பதால் இவருக்கு ஓடிஐ அல்லது டி20ஐ அரங்கில் வாய்ப்பு கொடுக்கலாம்.
8/9அன்ஷுல் கம்போஜ்: ஹரியானா அணியைச் சேர்ந்த இவர் வொயிட் பால் மற்றும் ரெட் பால் இரண்டிலும் நல்ல பல வித்தைகளை கையில் வைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் இரானி கோப்பை போட்டியில் கூட 2 இன்னிங்ஸில் 5 விக்கெட்டை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் இப்போது வளர்ந்து வரும் வீரராகவும் இருக்கிறார். ஹர்ஷித் ராணாவை போல் வேகம் இல்லாவிட்டாலும், இவரது லைன் மற்றும் லெந்த் சிறப்பாக இருக்கும். ராணாவின் லைன் மற்றும் லெந்தில் பெரிய பிரச்னை இருக்கிறது. அந்த வகையில், வரும் போட்டிகளில் அன்ஷுல் கம்போஜை டி20ஐ தொடரிலாவது வாய்ப்பளிக்க வேண்டும்.
9/9வைபவ் அரோரா: இவரும் ஹர்ஷித் ராணாவுடன் கேகேஆர் அணியில் விளையாடுபவர்தான். ஹர்ஷித் ராணாவை விட அனுபவம் மிக்கவர், புதிய பந்தை இரு திசைகளிலும் இவரால் திருப்ப முடியும். ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களில் மொத்தம் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். எனவே, இவருக்கும் டி20ஐ போட்டியில் வாய்ப்பளிப்பதே சரியாக இருக்கும். இவர்கள் வெறும் வலது கை பௌலர்கள் மட்டுமே. இடது கை பௌலர்கள் லிஸ்ட்டும் தனியாக சொல்லலாம்.