Coconut Water: ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பானங்களில் இளநீர் முதலிடம் வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தான்.
வெயில் காலம் மட்டுமல்லாது, அனைத்து பருவ காலங்களிலும் இளநீரை தாராளமாக அருந்தலாம். இதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இளநீரின் ஊட்டசத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்க, அதனை வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும்.
1/8இளநீரில் கால்சியம் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் தாமிரம் இரும்புச்சத்து என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சிறந்த எனர்ஜி பூஸ்டர்.
2/8இதய ஆரோக்கியம்: இளநீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சிறந்த பானமாக உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இதய துடிப்பையும் சீராக்கும்.
3/8உடல் பருமன்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு குறைந்த கலோரி கொண்ட இந்த மாதம் சிறந்த தீர்வாக இருக்கும். அது ஒரு இதில் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் பண்பும், பயோ ஆக்டிவ் என்சைன்களும் நிறைந்துள்ளன.
4/8கர்ப்பிணி பெண்களுக்கு காலை நேர வாந்தி குமட்டல் ஆகியவற்றை போக்கி, நீரிழப்பை ஈடு செய்யும் சிறந்த பானமாக இது இருக்கும்.
5/8நோய் எதிர்ப்பு சக்தி: எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இளநீர் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஆற்றல் கொண்டது.
6/8ஆற்றல்: எனர்ஜி அல்லது ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் பானங்களில் இளநீர் முதலிடம் வகிக்கிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் தான் இதற்கு முக்கிய காரணம்.
7/8இளமை: தேங்காய் நீர் அல்லது இளநீரில் உள்ள அலர்ச்சி எதிர்ப்பு பண்புகள் எலக்ட்ரோலைட்டுகள் சரும செல்களை பாதுகாத்து இளமையை காக்கிறது.
8/8பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.