Thalaivar 173 Movie Director : தலைவர் 173 படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Thalaivar 173 Movie Director : கமலும் ரஜினியும் ஒன்றாக இணையும் படம்தான், தலைவர் 173. இந்த படத்தை, யார் இயக்க போகிறார் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை ஆரம்பத்தில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. பின்னர், இதிலிருந்து விலகினார். இதையடுத்து, புது இயக்குநருக்கான வேட்டையில் படக்குழு இறங்கியிருக்கிறது.
1/7தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ரஜினிகாந்த். திரையுலகிற்கு வந்த புதிதில், கமலுடன் சேர்ந்து படம் நடித்த அவர், அதன் பின்பு எந்த படத்திலும் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை.
2/7கமலும் ரஜினியும், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கமலின் ராஜ்கமல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.
3/7தலைவர் 173 படத்தை, சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே தான் படத்திலிருந்து விலகுவதாக அவரே அறிவித்து விட்டார். இதனால், யார் படத்தை இயக்கப்போவது என்பது குறித்த கேள்வி பெரிதாக எழுந்தது.
4/7கமல்-ரஜினி படத்தை இயக்க, நிதிலன் சாமிநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது வேறு ஒரு இயக்குநரின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது.
5/7தமிழ் திரையுலகில் பெரிதாக எந்த படமும் இயக்கவில்லை என்றாலும், ஒரே படம் மூலம் பெரிய இடத்திற்கு சென்றவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அந்த படத்திற்காக அவர் தேசிய விருதும் வென்றார்.
6/7இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருக்கும் இவருக்கு, தலைவர் 173 படத்தை இயக்க கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.
7/7பார்க்கிங் திரைப்படம், சமீபத்தில் சிறந்த படம், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட தேசிய விருதுகளை அள்ளியது. இவர் தலைவர் 173 படத்தை இயக்குவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.