தனி ஒருவன் 2 வருமா, வராதா? இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்!

Written ByThirishala S.P
Published: Sep 17, 2025, 05:59 PM IST|Updated: Sep 17, 2025, 05:59 PM IST

Thani Oruvan 2 Update: தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்று தனி ஒருவன். அதன் பார்ட் 2 பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.

Thani Oruvan 2 Update: மித்ரன் ஐபிஎஸ் மீண்டும் வரும் உறுதி, பவர்ஃபுல் வில்லன் காத்திருப்பு, நயன்தாரா ரீஎன்ட்ரி பற்றிய சஸ்பென்ஸ் – இதையெல்லாம் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

Thani Oruvan1/7

‘தனி ஒருவன்’:

‘தனி ஒருவன்’: 2015ல் வெளிவந்த தனி ஒருவன், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடித்த படம். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் ஆன படம். ஜெயம் ரவியின் கரியரில் ஒரு அட்காசமான உயர்த்தை தந்த படம் இது.

Part 22/7

பார்ட் 2 எதிர்பார்ப்பு:

பார்ட் 2 எதிர்பார்ப்பு: படம் வெளிவந்த சில மாதங்களிலேயே ரசிகர்கள் “பார்ட் 2 வரணும்” என்று காத்திருந்தார்கள். 2023ல் தனி ஒருவன் 2 ப்ரோமோ வீடியோ வந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளிவரவில்லை.

Mohan raja 3/7

மோகன் ராஜா விளக்கம்:

மோகன் ராஜா விளக்கம்: சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோகன் ராஜா பேசிய போது, “இந்த படத்துக்கான பட்ஜெட் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், கதை பெரிய முதலீட்டை தேவைப்படுத்துகிறது எனவும் குறிபிட்டார். தொழில் சூழ்நிலை கொஞ்சம் மேம்பட்ட பிறகு படம் நிச்சயம் வரும்” என்று கூறினார்.

 Ravi Mohan 4/7

ரவி மோகன் ரீ-என்ட்ரி:

ரவி மோகன் ரீ-என்ட்ரி: மித்ரன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி மீண்டும் வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. முதல் பாகத்தைவிட வில்லன் இன்னும் பவர்ஃபுல் ஆவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வில்லன் யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.

Nayanathara5/7

நயன்தாரா திரும்புவாரா?

நயன்தாரா திரும்புவாரா? நயன்தாரா உட்பட சில முக்கிய கதாபாத்திரங்கள் திரும்ப வரலாம் என்று செய்திகள் பரவுகின்றன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ரசிகர்கள் “லேடீ லவ்” ஜோடி மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Highlights of first6/7

முதல் பாகம் ஹைலைட்ஸ்:

முதல் பாகம் ஹைலைட்ஸ்: தனி ஒருவன் படத்தில் போலீஸ்காரர் மித்ரன், விஞ்ஞானியும், மெடிக்கல் மாஃபியா தலைவனுமான சித்தார்த் அபிமன்யுவை எதிர்கொள்கிறார். அரவிந்த்சாமியின் நடிப்பு ஹைலைட். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் பிரமாண்டம் காட்டினர்.

Music and tech team7/7

தொழில்நுட்ப அணி மற்றும் இசை:

தொழில்நுட்ப அணி மற்றும் இசை: படத்தின் கேமரா ராம்ஜி, எடிட்டிங் கோபி கிருஷ்ணா, இசை ஹிப் ஹாப் தமிழா – எல்லாம் சேர்ந்து தனி ஒருவன் ஐ ப்ளாக்பஸ்டர் ஆக்கினர். அதனால் ரசிகர்கள் கேள்வி – “இப்போ தனி ஒருவன் 2 கதையில என்ன கலக்கப் போகுது?”