Sukraaditya Rajayoga: சுக்கிராதித்ய ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் முக்கிய 3 ராசிகள் சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவால் இன்பமான விஷயங்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன்,தனது உச்ச ராசியான மீனத்தில் நுழைந்துள்ளார்.
Raja Yoga Effects On Zodiac: இத்தகைய சூழ்நிலையில் சூரியனும், சுக்கிரனும் ஒன்றிணைந்து சுக்கிராதித்ய ராஜயோகத்தை உருவாக்கினர். இதனால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 3 ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் நிகழும், கஷ்டங்கள் தீரும், எதிர்பாராத வரவுகள் வந்துசேரும் மற்றும் தொழில், வேலை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் முன்னேறுவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், சூரியனும், சுக்கிரனும் ஒன்றிணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்கினார். (The Sun and Venus)
இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள், தங்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றத்தைக் காண்பார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
மீனம்(Pisces): இந்த ராசியின் லக்னத்தில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இதனால் இவர்கள் வாழ்க்கையில் சாதகமான விஷயங்கள் நடக்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வேலை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்(Taurus): சுக்ராதித்ய ராஜயோகத்தால் இந்த ராசியினுக்கு நிதி வரவு போன்றவை கிடைக்கும். வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி வெற்றியைக் கொண்டாடும் நேரமாக உள்ளது.
முதலீடு அல்லது சொத்து தொடர்பான முடிவுகளுக்கு நல்ல செய்தி வந்தடையலாம். வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெருகப்போகிறது.
தனுசு(Sagittarius): சுக்ராதித்ய ராஜயோகத்தால் இனிமையான செய்திகள் உங்களுக்கு வந்துசேரும், குறிப்பாக தொழில், வியாபாரம் மற்றும் வேலை போன்றவற்றில் முன்னேறத் தொடங்குவீர்கள். உறவுகள் வலுவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நலம் பெறுவீர்கள்.
இவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் எல்லாம் இந்த நேரத்தில் விட்டு விலகி செல்லும், உடல் நலத்தில் சுபமான ஆரோக்கியத்தை பெறுவார்கள், மனதளவில் தைரியம் அடைவார்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.