ஐப்பசி சஷ்டி... நினைத்தது நடக்க முருகனை இப்படி வழிபடுங்கள்!

Sasti Viratham 2025: இன்று தேய்பிறை சஷ்டி முழுநாள் உள்ளது. எனவே, இன்று முருகனை நினைத்து சஷ்டி விரதம் இருந்தால் நினைத்தது கைகூடும் என நம்பப்படுகிறது.

 

1 /7

தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறார் முருகப் பெருமான். முருகப் பெருமானின் அருளை பெற,  சஷ்டி விரதம் முக்கியமானதாக கருதப்படுகிற. சஷ்டியில் விரதம் இருந்தால் நினைத்து எல்லாம் கைகூடும் என நம்பப்படுகிறது.   

2 /7

ஒவ்வொரு  மாதமும் சிவபெருமானுக்கு பிரரோஷம், பெருமாளுக்கு ஏதாசசி என்று வருகிறதோ, அதே போல, முருகப்பெருமானுக்கு சஷ்டி திதி என்பது வருகிறது. சஷ்டி திதி நாளில் முருகனை வழிபடுவது அவரது அருளை பெற ஏற்ற நாளாக கருதப்படுகிறது.   

3 /7

இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால்,  அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என நம்ப்படுகிறது. அந்த வகையில், இன்று நவம்பர் 10ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதி உள்ளது.  இநத் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து கழுவ வேண்டும். தொடர்ந்து, முருகனின் படம் அல்லது சிலையை துடைத்து,  சந்தனம் குங்குமம் ஈட வேண்டும்.   

4 /7

அதன்பிறகு, முருகனுக்கு உகந்த இனிப்பான பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றை செய்து முருகனுக்கு நைவேத்தியமக படைத்து வழிபட வேண்டும்.   முருகன் சிலை வீட்டில் வைத்திருந்தால், அதில் பால் அபிஷேகம், சந்தேகம் அபிஷேகம் செய்ய வேண்டும்.  

5 /7

அபிஷேகம் செய்த பிறகு, முருகப்பெருமான் சிலைக்கு செவ்வரளி பூக்கள் சூட்டி, நைவேத்தியம் வைத்து படைத்து வழிபட வேண்டும்.  இப்படியெல்லாம் செய்து, முருகனை மனமுருகி வழிபடும்போது, நினைத்த காரியங்கள் கைகூடும் என நம்பப்படுகிறது. மேலும், அதிகமான கடனில் இருப்பவர்கள் அதில் இருந்து வெளியே வர முருகப்பெருமானை வழிபடுங்கள்  

6 /7

நீண்ட காலமாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் தேய்பிற சஷ்டி நாளில் முருகப் பெருமானை வழிபடு நல்லது என நம்பப்படுகிறது. குழந்தை வரம் கேட்டு இருப்பவர்கள், தேய்பிறை சஷ்டி நாளான இன்று முருகப் பெருமானுக்கு  பாலில் தேன் கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நல்லது என கருதப்படுகிறது.  

7 /7

மேலும், வீட்டில் வேல் வைத்திருந்தால், தேனால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.  அதோடு, கந்த சஷ்டி கவசத்தை பாடி, முருகனை மனதார வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், நினைத்த காரியங்கள் கைக் கூடும் என சொல்லப்படுகிறது.