அமானுஷ்யம்.. பேய்கள்! 5 ராசிக்காரர்களால் உணர முடியுமாம்.. யாரெல்லாம் தெரியுமா?

Written ByUmabarkavi K
Published: Nov 30, 2025, 03:38 PM IST|Updated: Nov 30, 2025, 03:38 PM IST

Zodiac Sign To Experience Paranormal Activities: ஜோதிடத்தின்படி, சில ராசிகள் அமானுஷ்யங்களை உணர முடியும் என சொல்லப்படுகிறது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம். 

 

1/7

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உடையவர்களாக கருதப்படுகிறது.  இது அந்தந்த  ராசியினரின் குணத்தை மதிப்பிட செய்கிறது.  அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகள் அமானுஷ்யங்களை உணரக் கூடியவர்கள் கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில ராசிகள் அமானுஷ் செயல்களை  சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாம். 

 

2/7

கண்ணுக்குத் தெரியாதவற்றையோ சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும் என ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. சில சமயங்களில் மற்றவர்கள் கவனிக்காத நிகழ்வுகளை அவர்கள் பார்க்கும் நேரம் வருமாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, 5 ராசிகள் அமானுஷ்யத்தை உணர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம். 

 

3/7

மீன ராசிக்காரர்கள் பொதுவாகவே அதிக  கற்பனையை கொண்டவர்கள். இவர்கள் அன்மீகத்திலும் அதிக தொடர்புகளை வைத்துள்ளனர். இவர்களால் அமானுஷ்யங்களை எளிதாக உணர்ந்து கொள்ள முடியுமாம். இவர்கள் எப்போது கற்பனையிலேயே இருப்பார்களாம். இவர்களுக்கு உலகிற்கு மிகப்பெரிய தொடர்பு இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

 

4/7

விருச்சிக  ராசிக்காரர்கள் ஆழமான சிந்தனைகளை கொண்டவர்கள். இவர்களுக்கு அதிகப்படியான கற்பனை சிந்தனைகள் உள்ளன.  இவர்கள் இருளை பார்த்து பயப்படமாட்டார்கள். இவர்கள் அமானுஷ்ய நிகழ்வுகளை எளிதில் அறிந்து கொள்வதற்கான திறன் கொண்டவர்கள். அமானுஷ்யங்களை கண்டு இவர்கள் பயம் கொள்வதில்லை. எனவே, இவர்கள் அமானுஷ்களை எளிதான உணர்ந்து கொள்வதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

 

5/7

கடக ராசிக்காரர்கள் வலுவான உணர்திறன் கொண்டவர்கள். இறந்தவர்களின் ஆன்மாக்கள் இவர்களை தொடர்பு கொள்ள முயலும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஆமானுஷ்யங்களை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம். மேலும், இருளை பார்த்து ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்

 

6/7

தனுசு ராசிக்காரர்கள் பயணம் செய்யும்போது, குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அவர்கள் அமானுஷ்யத்தை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.  மேலும், அமானுஷ்யம் சார்ந்த புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் கொள்வார்கள். அதற்கான நிபுணர்களை கலந்து ஆலோசிக்க முயற்சி மேற்கொள்வார்கள். கண்ணுக்கு தெரியாத உலகங்களை பற்றியும், அது குறித்து ஆய்வு செய்யவும் அவர்கள் முயற்சி மேற்கொள்வார்கள். 

 

7/7

கும்ப ராசிக்காரர்கள் அதிக ஆற்றல் திறன் கொண்டவர்கள். இதனால், இவர்கள் அமானுஷ்யங்கள் அனுபவிக்கலாம். கும்ப ராசிக்காரர்கள் அறிவியல் ரீதியாக கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் கொண்டவர்கள். மேலும், அமானுஷ்யங்களை பற்றி ஆராயவும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். பேய்கள் குறித்து அதிகமாக ஆராய்ச்சி மேற்கொள்வார்கள்.  இதனால், அமானுஷ்யங்களை நோக்கி இவர்களை அழைக்க செல்கிறது. எனவே, இவர்கள் அமானுஷ்யங்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)