Thigh, Hip Fat Loss Workout: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த டாப் 5 உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் 15 நாட்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
Top 5 Thigh, Hip Fat Loss Workout: குறிப்பாக, தொடை மற்றும் இடுப்பு சதையை குறைக்க விரும்புபவர்கள் இந்த உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ளுங்கள். எனவே, அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்க பலரும் ஜிம் போன்றவற்றுக்கு செல்கின்றனர். ஆனால், வீட்டில் இருந்தே சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம். அந்த வகையில், இடுப்பு மற்றும் தொடையில் உள்ள கொழுப்பை குறைக்க இந்த டாப் 5 உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
முதல் உடற்பயிற்சி: இந்த உடற்பயிற்சி மிகவும் எளிதானது, கையை முன்பக்கம் மடக்கி வைத்துக் கொண்டு, அமர்ந்து அமர்ந்து எழுந்து நிற்க வேண்டும். இதுபோன்று தினமும் 40 முறை செய்தால், தொடை மற்றும் இடுப்பு சதை குறைக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது உடற்பயிற்சி: முதலில் அமரந்தப்படி ஒரு கால்களை சைடில் நீக்கி, மற்றொரு காலை மடக்கி வைக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டு கைகளையும், தலைக்கு பின்பகுதியில் மடக்கி வைக்க வேண்டும். பின்பு, வலது காலை நீட்டி வைத்திருந்தால், அந்த பக்கம் உங்கள் தலையை சாய்க்க வேண்டும். இப்படியாக 30 முறை தினமும் செய்ய வேண்டும்.
மூன்றாவது உடற்பயிற்சி: முட்டிப்போட்டு இரண்டு கைகளை இடுப்பில் வைக்க வேண்டும். இதன்பின்பு, அமர்ந்து அமர்ந்து எழ வேண்டும். இப்படியாக தினமும் 30 முதல் 40 முறை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களது தொடையில் இருக்கும் சதை குறையக் கூடும்.
நான்காவது உடற்பயிற்சி: முதலில் தரையில் அமர்ந்து, இரண்டு கைகளையும் பின்பக்கம் தரையில் வைத்து, இரண்டு கால்களை நீட்டி, மடக்க வேண்டும். இப்படியாக 30 முதல் 40 முறை செய்ய வேண்டும். இதன் மூலம், உங்களுக்கு தொடை சதை குறைய வாய்ப்புள்ளது.
ஐந்தாவது உடற்பயிற்சி: புஷ் அப் எடுப்பது போன்று தான் இந்த உடற்பயிற்சி. புஷ் அப் எடுப்பது, தரையில் படுக்காமல் கை உயரத்தில் எழ வேண்டும். இதன்பின்பு, உங்களின் ஒவ்வொரு கால்களை மேலே தூக்கி இறக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு கால்களையும் 30 முதல் 40 முறை உயர்த்தி செய்ய வேண்டும்.
ஆறாவது உடற்பயிற்சி: முதலில் நேராக படுத்துக் கொண்டு, இரண்டு கைகளை தரையில் நேராக வைக்க வேண்டும். மேலும், இரண்டு கால்களையும் மடங்கி வைத்துக் கொண்டு, உங்களது இடுப்பு பகுதியை மேலே தூக்க வேண்டும். இதுபோன்று தினமும் 30 முறை செய்ய வேண்டும். இதன் மூலம், உங்கள் இடுப்பு மற்றும் தொடை சதை குறையக் கூடும்.