How Actresses Stay Young: உலகளவில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் மட்டுமின்றி, திரைத்துறையில் செயல்படும் அனைவரும் தங்களின் சருமத்தையும் உடலையும் சிறப்பாகப் பராமரிக்க அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் பளபளப்பாக, இளமையாகத் தோன்றுவதற்கான முக்கிய காரணங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
Celebrity Anti-Aging Treatments: நாம் நடிகைகளின் அழகைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம், ஆனால் அது மிகுந்த கட்டுப்பாடு மற்றும் சீரான வாழ்க்கை முறையைச் சார்ந்துள்ளது என்பதைப் பலர் உணருவதில்லை. சரும ஆரோக்கியத்திற்கும் உடல் வடிவத்திற்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? வாருங்கள், அவர்கள் எந்த முறைகளைப் பின்பற்றிப் பேரழகையும் இளமையும் தக்கவைக்கின்றனர் என்பதைப் பார்க்கலாம்.
சத்தான உணவு(Nutritious food): பழங்கள், காய்கறிகள், புரத உணவுகள் மற்றும் நீர் அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள்.
தண்ணீர் குடித்தல்(Drinking water): தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
சரும பராமரிப்பு(Skin care): கிளின்சிங், மாய்ச்சரைசிங், சன்ஸ்கிரீன் போன்ற தினசரி பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
உடற்பயிற்சி(Exercise): யோகா, பிலாட்டீஸ், ஜிம்மில் பயிற்சி செய்து உடல் மற்றும் மனதைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறார்கள்.
போதிய உறக்கம்(Adequate sleep): தினமும் 7-9 மணி நேரம் உறங்குவது இளமையை நீடிக்க உதவுகிறது.
மனஅழுத்தத்திலிருந்து விடுபடுதல்(Relief from stress): மெடிடேஷன், புத்தக வாசிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு மனதைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள்.
காஸ்மெட்டிக் சிகிச்சைகள்(Cosmetic treatments): மேக்அப், ஃபேஷியல், லேசர் சிகிச்சை போன்றவை உதவக்கூடியவை.
மனதளவில் இளமையாக இருப்பது(Being young at heart): எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதால் இளமை நீடிக்கிறது.