குறட்டையால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!

Snoring Remedies: பொதுவாகக் குறட்டை சில தடைப்புகளால் ஏற்படலாம். ஆனால், அது தொடர்ந்து இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்குத் தெரிந்து கொண்டு, குறட்டையை உடனடியாக குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

How To Stop Snoring: குறட்டையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், நீங்கள் குறட்டை வருவதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு, அதைச் சரிசெய்வதற்கான வழிகளை அறிந்து, சுவாசப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்கலாம்.

 

1 /8

பக்கவாட்டில் படுப்பது மிக முக்கியம்(Sleeping on your side is very important): நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குக் குறட்டை ஒரு பொதுவான பிரச்சனை. முதுகில் படுப்பதை விடப் பக்கவாட்டில் படுப்பது குறட்டை குறைக்க உதவும்.

2 /8

தலைக்குச் சிறிது உயரம் கொடுத்து உறங்குங்கள்(Sleep with your head slightly elevated): தலையை 4-6 அங்குலம் உயர்த்தி உறங்கினால், சுவாசப் பாதை திறந்திருக்க உதவுகிறது. அதற்காக உயர்ந்த தலையணை பயன்படுத்தலாம்.

3 /8

மூக்கடைப்பை நீக்குங்கள்(Relieve nasal congestion): மூக்கடைப்பு குறைவு இருந்தால் குறட்டையும் குறையும். உப்புநீர் வாஷ், நீராவி வாங்குதல், எலுமிச்சை தேன் கலந்த நீர் பருகுதல் போன்ற முறைகள் மூக்கடைப்பு நீக்க உதவும்.

4 /8

மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்குங்கள்(Avoid alcohol and smoking): மதுபானம் மற்றும் புகைபிடித்தல், தொண்டையில் உள்ள தசைகளைத் தளரச் செய்து குறட்டை அதிகரிக்கச் செய்யும். உறங்குவதற்கு முன் குறைந்தபட்சம் 3-4 மணிநேரங்களுக்கு முன் இதைத் தவிர்ப்பது நல்லது.

5 /8

உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள்(Control your weight): அதிக உடல் எடை குறட்டையின் முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். உடல் பருமன் உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைத்தால், குறட்டையும் கட்டுப்படும்.

6 /8

தேவையான உறக்கம் பெறுங்கள்(Get the sleep you need.): போதிய தூக்கமின்றி அதிக நேரம் வேலை செய்தால், தசைகள் அதிகமாகத் தளர்ந்து குறட்டை ஏற்படும். தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் உறங்குங்கள்.

7 /8

மருத்துவ ஆலோசனை பெறுங்கள்(Get medical advice): குறைந்த நேரத்தில் கூட கடுமையான குறட்டை பிரச்சனை ஏற்படுமானால், அது தூக்க அப்னியா (Sleep Apnea) போன்ற மருத்துவ பிரச்சனையாக இருக்கலாம். இதைப் பரிசோதிக்க, மருத்துவரை அணு

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.