This Week New Movies Release: இந்த வாரம் திரையரங்குகளும் ஓடிடி-களும் படங்களால் நிரம்பியிருக்கிறது. தனுஷின் இட்லி கடை ரிலீஸை பார்த்து இத்தனை படங்கள் ஏன் திடீரென போட்டியிலிருந்து பின்வாங்கின?
This Week New Movies Release: செப்டம்பர் 23 முதல் 26 வரை தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் 15-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ரசிகர்கள் எந்த படத்தை தேர்வு செய்வார்கள் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
1/7தனுஷின் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் போட்டியை தவிர்க்க, இந்த வாரம் மட்டும் பல படங்கள் தியேட்டரில், பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ரசிகர்கள் படப்பட்டியலை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
2/7Theatrical Releases Part 1 செப்டம்பர் 25 மற்றும் 26ஆம் தேதி மொத்தம் 12 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. ரம்யா பாண்டியன் நடித்த கயிலன், ஸ்ரீலீலா டப்பிங் படம் Kiss Me Idiot, நட்டி நட்ராஜ் நடித்த ரைட், ரிஷி ரித்விக் நடித்த குற்றம் தவிர் மற்றும் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.
3/7Theatrical Releases Part 2 ஷகீலா, மதுமிதா நடிப்பில் சரீரம், புதுமுகங்கள் நடிப்பில் டோர் நம்பர் 420, ஹரிஷ், மேக்னா நடிப்பில் பனை, ராஜசோழன் இயக்கிய IAS கண்ணம்மா, ஷான் நிகம் நடித்த பல்டி உள்ளிட்ட படங்கள் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகின்றன. ரசிகர்களுக்கு அதிகப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
4/7Big Re-release & Telugu Film குஷி – எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த பிளாக்பஸ்டர் படம், செப்டம்பர் 25ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் தெலுங்கு பவர் ஸ்டார் மற்றும் பிரியங்கா மோகன் நடித்த OG படம் வெளியாகிறது. தமிழில் அந்த 7 நாட்கள் படமும் அதே தேதியில் திரையரங்குகளை அடைகிறது.
5/7Netflix OTT Releases செப்டம்பர் 26ஆம் தேதி நெட்பிளிக்ஸில் மூன்று படங்கள் வெளியாகின்றன. French Lover – பாரிஸை மையமாகக் கொண்ட ரொமான்டிக் கதை. Mantis – தென் கொரிய ஆக்ஷன் த்ரில்லர். ஃபகத் பாசில் நடிப்பில் மலையாள படம் ஓடும் குதிரா சாடும் குதிரா. இவை அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் ஸ்ட்ரீம் ஆகின்றன.
6/7JioCinema OTT Releases ஜியோ ஹாட்ஸ்டாரில் மோகன்லால் நடித்த Hridayapoorvam செப்டம்பர் 26 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. 75 கோடி வசூலித்த படம். மேலும் Sundarakandam – 40 வயது நபரின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றங்களை மையமாகக் கொண்ட தெலுங்கு படம், செப்டம்பர் 23 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
7/7Prime & Others OTT Releases அமேசான் பிரைமில் Hotel Castira செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகிறது. Cocaine Quarterback ஆவணப்படம் செப்டம்பர் 25 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. மனோரமா மேக்ஸில் Circuit செப்டம்பர் 26 முதல் வெளியாகிறது. இவ்வளவு படங்கள் ஒரே வாரத்தில் வெளியாக, ரசிகர்கள் குழப்பத்திலும் ஆவலிலும் உள்ளனர்.