இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் 18 புதுப்படங்கள்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Releases This Week July 18th 2025 : அனைத்து வாரங்களையும் போல, இந்த வாரமும் புதுப்புது திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள், மற்றும் வெப் தொடர்கள் தெரியுமா?

OTT Releases This Week July 18th 2025 : அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற இந்தியாவின் பிரபலமான ஓடிடி தளங்களில் வாரா வாரம் திரைப்படங்களும் தொடர்களும் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவான படங்களும் தொடர்களும் ரிலீஸாக இருக்கின்றன. அவை அனைத்தையும், எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1 /7

டிஎன்ஏ-ஹாட்ஸ்டார் அதர்வா, நிமிஷா சஜயன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்த படம், டிஎன்ஏ. இந்த படம், தமிழில் வரும் ஜூலை 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

2 /7

குபேரா-ப்ரைம் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம், குபேரா. இந்த படத்தி நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் ஜூலை 18 அன்று வெளியாக இருக்கிறது.

3 /7

படைத்தலைவன் - டெண்ட்கொட்டா மறைந்த நடிகர், அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் ஷன்முக பாண்டியன் நடித்திருக்கும் படம், படைத்தலைவன். இந்த படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் வரும் ஜூலை 18 முதல் பார்க்கலாம். 

4 /7

மனிதர்கள் - ஆஹா மனிதர்கள் திரைப்படத்தை ஆஹா தமிழ் தளத்தில் வரும் ஆகஸ்ட் 18 முதல் காணலாம். 

5 /7

சட்டமும் நீதியும் - ஜீ 5 சரவணன், அருல் சங்கர், நம்ரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் வெப் தொடர், சட்டமும் நீதியும். கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த தொடரில் 7 எபிசோட்கள் இருக்கின்றன. இதனை, ஜீ 5 தளத்தில் வரும் ஜூலை 18 முதல் காணலாம்.

6 /7

மேற்கூறிய படங்கள், தொடர்களை தாண்டி இன்னும் சில ஓடிடி ரிலீஸ்கள் இருக்கின்றன. இவற்றையும் வரும் 18 ஆம் தேதி வெளியாகின்றன பைரவம் தெலுங்கு தொடரை, ஜீ 5 தளத்தில் காணலாம். ஸ்ட்ரேஞ்ச் வர்ல்ட்ஸ் ஆங்கில தொடரை ஹாட்ஸ்டாரில் காணலாம். ஸ்பெஷல் ஓபிஎஸ் சீசன் 2 இந்தி தொடரை ஹாட்ஸ்டாரிலும், வால் டு வால் ஒரியன் தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும், ட்ரிகர் மற்றும் அண்டேம்ட் அகிய படங்களை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் காணலாம். தி  கர்ஸ்ட் படமும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. 

7 /7

ஜூலை 18 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள்-படங்கள்:  டெலிரியம்-ஸ்பேனிஷ் தொடர் தி அசெஸ்மெண்ட்- ஆங்கில படம் ஏமி ப்ராட்லி இஸ் மிஸ்ஸிங் சீசன் 1 - தொடர் ட்ரெயின் ரெக் பலூன் பாய் - ஆங்கிலம் - டாக்குமெண்ட்ரி படம் ப்ரைம் ரிலீஸ்: ஜியோகோஸ் டி செடக்‌ஷன் ஸ்பேனிஷ் படம் ஃபைட்ஸ் ப்ரேக் ஸ்பியர் சீன மொழி தொடர் தி அமச்சுவர் படத்தை ஹுலு தளத்தில் காணலாம்.