This Week OTT Release List : இந்த வாரம் ஓடிடியில் புதிதாக சில படங்களும் தொடர்களும் ரிலீஸாக இருக்கின்றன. இவற்றை, எந்த தளத்தில், எப்போது, எப்படி பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
This Week OTT Release List : ஓடிடி தளங்களின் வருகை பெருகியதை தொடர்ந்து, வாரா வாரம், புதுப்புது படங்களும் தொடர்களும் ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. இதற்கு மக்களும் பெரும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்த வாரமும், சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸான சில படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? இதோ விவரம்!
Thamma-Prime Rent, The Girlfriend-Netflix ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இரண்டு படங்கள், இந்த வார ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. ஒரு படத்தின் பெயர், தம்மா. இந்தி படமான இது இந்தியில் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2ஆம் தேதியான இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. அதே போல, தி கேர்ள் ஃப்ரெண்ட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
Diés Iraé-JioHotstar ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான படம், டைஸ் இரே. இந்த படத்தில் ஹீரோவாக பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். த்ரில்லர் படமான இதனை, டிசம்பர் 5 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் சிம்ப்ளி சவுத்திலும் பார்க்கலாம்.
Kuttram Purindhavan-Sony Liv பசுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் தொடர், குற்றம் புரிந்தவன். இந்த தொடரை, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சோனி லிவ் தளத்தில் டிசம்பர் 5 முதல் பார்க்கலாம்.
Stephen-Netflix கோமதி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ஸ்டீஃபன். இந்த படத்தை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் டிசம்பர் 5 முதல் பார்க்கலாம்.
Troll 2-Netflix ட்ரோல் 2 அட்வென்சர் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
Dhooplet-aha அஸ்வின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தொடர், தூப்லெட் போலிஸ் ஸ்டேஷன். இந்த தொடரை, டிசம்பர் 5 முதல் ஆஹா தளத்தில் காணலாம்.
The Bad Guys2 (ஆங்கிலம், இந்தி) - JioHotstar The Merchants Of Joy (ஆங்கிலம்) - PrimeVideo Killing Eve (பிரிட்டிஷ்) - Netflix Matt Rife : Unrapped -(ஆங்கிலம்) - Netflix Bau, Artist at War (ஆங்கிலம்) - PrimeVideo Griffin In Summer (ஆங்கிலம்) - Hulu Tapawingo (ஆங்கிலம்) - PrimeVideo Rent Tron : Ares (ஆங்கிலம்) - PrimeVideo Rent டிசம்பர் 3: My Secret Santa (ஆங்கிலம்) - Netflix Oh What Fun (ஆங்கிலம்) - PrimeVideo டிசம்பர் 4 The Abandons (ஆங்கிலம்) - Netflix Believe : The Ultimate Battle (இந்தோனேசிய) - Netflix Architecton (ஆங்கிலம்) - HBO Max
டிசம்பர் 5 : The Great Pre Wedding Show (தெலுங்கு) - Zee5 அரசய்யனா பிரேமபிரசங்க (கன்னடம்) - சன்நக்ஸ்ட் கர்வாலி பெத்வாலி (இந்தி) - Zee5 The Night My Dad Saved Christmas (ஸ்பானிஷ்) - நெட்ஃபிக்ஸ் New Yorkerat100 (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ் The Family McMullen (ஆங்கிலம்) - HBO மேக்ஸ் Jay Kelly (ஆங்கிலம்) - நெட்ஃபிக்ஸ் Man Finds Tape (ஆங்கிலம்) - பிரைம்வீடியோ வாடகை Muzzle2: சிட்டி ஆஃப் வுல்வ்ஸ் (ஆங்கிலம்) - பிரைம்வீடியோ வாடகை Reflection In A Dead Diamond (ஆங்கிலம்) - ஷடர் டிசம்பர் 6 #ProBono (கொரியன்) [தொடர்] - நெட்ஃபிக்ஸ்