இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய 2 திரைப்படங்கள் – எதை, எங்கு பார்க்கலாம்?

Written ByYuvashree
Published: Apr 22, 2025, 10:20 AM IST|Updated: Apr 22, 2025, 10:20 AM IST

This Week OTT Releases : இந்த வாரம், ஓடிடியில் பல புது படங்கள் வெளியாக இருக்கிறது. அதிலும், 2 புதிய படங்கள் அதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இவற்றை,எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

This Week OTT Releases : ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதை தொடர்ந்து, பல புதுப்படங்களும் தொடர்களும் நம் இல்லம் தேடி வர ஆரம்பித்து விட்டது. தியேட்டரில் பார்க்க தவறியதை, இன்று குடும்பத்துடன் அமர்ந்து வீட்டிலேயே பார்க்கிறோம். அப்படி, இந்த வாரமும் சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

ஓடிடியில் இரண்டு படங்கள்1/7

ஓடிடியில் இரண்டு படங்கள்

இந்த வாரம், ஓடிடியில் பல புது படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. அதிலும் குறிப்பாக மக்களின் கவனம் ஈர்த்த இந்த இரண்டு திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

வீர தீர சூரன்2/7

வீர தீர சூரன்

முதலாவதாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்த படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்தை எஸ்.யு அருண்குமார் இயக்கியிருந்தார். படம், ரிலீஸிற்கு தயாராக இருந்த சமயத்தில், ஓடிடி உரிமை குறித்த பிரச்சனை எழுந்ததால், இதன் முதல் காட்சி ரத்தானது. இருப்பினும், சொன்னபடியே படம் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

எம்புரான் 3/7

எம்புரான்

அடுத்ததாக மக்களை கவர்ந்த படம், L2: எம்புரான். இந்த படத்தை பிருத்விராஜ் இயக்கி நடித்திருந்தார். அரசியல் பேசிய இந்த படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டுமென எதிர்ப்புகள் வந்தது. இதைக்கடந்தும், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

விக்ரம் படம்4/7

விக்ரம் படம்

விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி பார்க்கலாம். 

மோகன் லால் படம்5/7

மோகன் லால் படம்

மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்த எம்புரான் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

மக்களின் எதிர்பார்ப்பு6/7

மக்களின் எதிர்பார்ப்பு

இரு படங்களுமே பல கோடி வசூலித்திருக்கும் நிலையில், இதனை ஓடிடியில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்7/7

ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

மேற்கூறியவை அல்லாமல் இன்னும் சில திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

தருணம் படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் ஏப்ரல் 25 முதல் பார்க்கலாம். யூ சீசன் 5 தொடரை, ஏப்ரல் 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். அதே போல, நெட்ஃப்ளிக்ஸில் மேட், அ ஜுவல் தீஃப் மற்றும் ஹவோக் ஆகிய படங்களை ஏப்ரல் 25ஆம் தேதி காணலாம். பாங்கோலின் குளூஸ் ஜர்னி படம் ஏற்கனவே நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிவிட்டது. புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோசன் படத்தையும் நெட்ஃப்ளிக்ஸில் ஏப்ரல் 23 முதல் பார்க்கலாம்.