இந்த வார ஓடிடி ரிலீஸ்! வார் 2 to பாம்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Written ByYuvashree
Published: Oct 09, 2025, 10:49 AM IST|Updated: Oct 09, 2025, 10:49 AM IST

This Week OTT Releases : இந்த வாரம், சில திரைப்படங்களும் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது. அவற்றை எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

This Week OTT Releases : ஓடிடி தளங்களின் வருகையால், புதுப்படங்களும் தொடர்களும் அடிக்கடி ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. இந்த வாரம், வார் 2 முதல் பாம் வரை பல படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. கூடவே சில வெப் தொடர்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Bomb1/7

பாம்

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான படம், பாம். இதில் காளி வெங்கட், சிவாத்மிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படம், ஆஹா தமிழ் தளத்தில் அக்டோபர் 10ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது. 

Rambo2/7

ராம்போ

அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ராம்போ. இந்த படம், நேரடியாக சன் நெக்ஸ்ட் தளத்தில் அக்டோபர் 10ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

Veduvan3/7

வேடுவன்

சஞ்சீவ் மற்றும் கண்ணா ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் வேடுவன் வெப் தொடரை அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் காணலாம்.

Mirai4/7

மிராய்

சூப்பர் ஹிட் அடித்த மிராய் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 10ஆம் தேதி முதல் காணலாம். 

The Conjuring Last Rites5/7

தி கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ்

தி கான்ஜூரிங் : லாஸ்ட் ரைட்ஸ் திரைப்பட்த்தை ஆங்கிலத்தில் ப்ரைம் வீடியோ ரெண்ட் மூலம் பார்க்கலாம். 

War 26/7

வார் 2

ரித்திக் ரோஷன், ஜூனியர் NTR நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், வார் 2. இந்த படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில், அக்டோபர் 10 அன்று பார்க்கலாம்.

Other Releases7/7

பிற ஓடிடி ரிலீஸ்

மேற்கூறியவை போலவே, இன்னும் சில தொடர்களும் படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன. 

True Haunting (English) [Series] - Netflix

The Baltimoreons (English) - Primevideo Rent

Cloud (English) - Primevideo Rent

Freakier Friday (English) - Primevideo Rent

Him (English) - Primevideo Rent

A Little Prayer (English) - Primevideo Rent

Is It Cake? Halloween (English) [Series] - Netflix

Nero The Assassin (French) [Series] - Netflix

Carmelo (Brazilian) [Series] - Netflix

Maintenance Required (English) - Primevideo

Boots (English) [Series] - Netflix

The Resurrected (Taiwanese) [Series] - Netflix

Dendam MalamKelam (Indonesian) - Netflix

Tribenadhari Barbarik (Telugu + Tamil)

Kurukshetra (Hindi, Tamil, Tel, Mal, Kan) [Series] - Netflix

Search : The Naina Murder Case (Hindi) [Series] - JioHotstar

The Woman In Cabin10 (English) - Netflix

The Chosen : Season 5 (English) [Series] - Netflix

Dr.Seuss's Horton (English) [Animated Series] - Netflix

Old Money (Turkish) [Series] - Netflix

Martabat : Misi Berdarah (Malaysian) - Netflix