Tamil Nadu Government | ஒரு வீட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் மூன்று திட்டங்கள் இப்போது நடைமுறையில் இருப்பது தெரியுமா? தெரிந்து கொள்வோம்.
Tamil Nadu Government Schemes | தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மூன்று திட்டங்கள் மூலம் ஒரு வீட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கிடைகும். என்னென்ன திட்டங்கள் மூலம் இந்த தொகை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு அரசு பல முன்னோடி திட்டங்களை இப்போது செயல்படுத்தி வருகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய மூன்று திட்டங்களும் இந்தியாவுக்கே முன்னோடியாக சிறப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படுகிறது. புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதேபோல், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு வீட்டில் தாய் மற்றும் கல்லூரி செல்லும் மகன், மகள் இருந்தால் மூன்று பேரும் இந்த மூன்று திட்டங்களின் மூலம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெற முடியும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு வீட்டில் ஒரு மகளிருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் அந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு வீட்டில் இரண்டு கல்லூரி மாணவிகள் இருந்தாலும் சரி, இரண்டு கல்லூரி மாணவர்கள் இருந்தாலும் சரி.. அல்லது ஒரு மாணவி, ஒரு மாணவர் இருந்தாலும் தலா ஆயிரம் ரூபாய் மாதம் பெற்றுவிட முடியும்.
இந்த மூன்று திட்டங்களும் தமிழ்நாட்டில் இப்போது வெகு சிறப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை இப்போது இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் கொடுப்பதன் வழியாக குடும்ப பொருளாதார சுமை குறைகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதன் மூலம் உயர் கல்வி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் மாணவர்களும் கல்லூரி செல்லும் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் இடைக்கற்றல் மிக மிக குறைவாக உள்ள மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதுவரை இந்த திட்டங்களில் பயன்பெறாதவர்கள், இந்த திட்டத்தில் சீக்கிரம் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளுங்கள். கலைஞர் உரிமைத் தொகையை பொறுத்தவரை ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் போதும். அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதேபோல், கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்லூரிகள் வழியாக புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கு விண்ணப்பித்து மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.