Tips To Make Your Nails Grow Long And Fast : பலருக்கு, நகம் வளர்க்க பிடிக்கும். இந்த நகத்தை வேகமாக வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.
Tips To Make Your Nails Grow Long And Fast : நம் அனைவருக்குமே, நகம் வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதனை செய்ய, சில ஈசியான வழிகள் இருக்கிறது. அவை என்ன தெரியுமா?
உங்கள் நகங்களை, வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இது, உங்கள் நகம் வளர உதவும். இதில் வைட்டமின் E இருப்பதால், உடலில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் வளர உதவும். அதே போல, தினமும் இரவு உறங்க செல்லும் முன்பும் இந்த மசாஜை செய்யலாம்.
பயோடின் மாத்திரைகள், நகம் வளர்வதற்கு ஏற்ற வைட்டமினை உடலுக்கு தரும் என்று கூறப்படுகிறது. அப்படி மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உங்கள் டயட்டில் வாழைப்பழம், அவகேடோ உள்ளிட்ட பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
அக்ரலிக் இருக்கும் நெயில் பாலிஷை நகங்களில் உபயோகிப்பதை தவிர்க்கவும். இது, உங்கள் நகத்தை பலவீனமடைய செய்ய்யலாம்.
முட்டை ஓடுகளையும் நகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். முட்டை ஓடுகளை எடுத்து, அதனை அரைத்து பேஸ்ட் ஆக மாற்றி, அதனை நகத்தில் தடவலாம். இது, உங்கள் நகம் விரைவில் வளர உதவும் என்று கூறப்படுகிறது.
தேன், பேக்டீரியா மற்றும் அழுக்கு தொற்று (fungal) ஏற்படாமல் தடுக்கிறது. எனவே, தேன் மற்றும் எலுமிச்சை சாரை வைத்து நெயில் மாஸ்க் உருவாகி அதனை நகத்தில் தடவலாம். இதனை தினமும் நகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து பின்பு தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும்.
நகங்களை சீக்கிரமாக வளர வைக்க, எலுமிச்சை துண்டு ஒன்றை எடுத்து அதனை விரல் நகங்கள் மற்றும் கால் நகங்களில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளில், 5 முறையாவது செய்ய வேண்டும். பின்னர், நகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது